மணிமேகலை துறவும் பவுத்த தத்துவமும்
மணிமேகலை துறவும் பவுத்த தத்துவமும் எழுத்தாளர்: செந்தீ நடராசன் வெளியிடப்பட்டது: 26 செப்டம்பர் 2014 சமயம் வேறு, தத்துவம் வேறு, தர்க்கம் வேறு, அறவியல் வேறு. ஒரு நெறியினைப் பின் பற்றும் மக்கள் கூட்டத்தை ஒரு சமயத்தவராக கருதலாம். அச்சமயத்தைப் பின்பற்றும் எல்லா மக்களும் அச்சமயத்தின் தத்துவ தருக்கக் கூறு களைத் தெரிந்திருக்க வேண்டுமென்றில்லை. அது அறிவர்களின் செயல். ஒரு சமயத்தின் இலக்கினை அடைவதற்கு உதவும் விதத்தில் அச் சமயத்திற்கு ஒரு கட்டுக்கோப்பான ஒழுக்க நெறி வலியுறுத்தப்படும். உலகைப் படைத்த ஒருவனை ஏற்காத பௌத்த, சமண, ஆசீவக சமயங்கள் பிறப்பறுக்கும் குறிக்கோளை அடைவதற்காகக் கண்டிப்பான நடைமுறைகளை- ஒழுக்க நெறிகளை- மக்களுக்குச் சொல்கிறது. எனவேதான் அவர்கள் சார்பில் அறநூற்கள் குவிந்தன. இது சமயத்தின் அறவியல் பகுதி. உலகம், உலகத்து உயிர்கள் மற்றும் உலகப் பொருட்கள் ஆகியவற்றின் பரிணாமம் (தோற்றம், ஒடுக்கம்) குறித்துப் பேசுவது தத்துவம் அத்தத் துவம் உலகப் பொருளை உண்மை எனக்காண்பது, மாயை அல்லது கருத்து எனக் காண்பது என்று இரு...