Posts

Showing posts from February, 2016

மணிமேகலை துறவும் பவுத்த தத்துவமும்

Image
மணிமேகலை துறவும் பவுத்த தத்துவமும் எழுத்தாளர்:  செந்தீ நடராசன்   வெளியிடப்பட்டது: 26 செப்டம்பர் 2014 சமயம் வேறு, தத்துவம் வேறு, தர்க்கம் வேறு, அறவியல் வேறு.  ஒரு நெறியினைப் பின் பற்றும் மக்கள் கூட்டத்தை ஒரு சமயத்தவராக கருதலாம்.  அச்சமயத்தைப் பின்பற்றும் எல்லா மக்களும் அச்சமயத்தின் தத்துவ தருக்கக் கூறு களைத் தெரிந்திருக்க வேண்டுமென்றில்லை.  அது அறிவர்களின் செயல்.  ஒரு சமயத்தின் இலக்கினை அடைவதற்கு உதவும் விதத்தில் அச் சமயத்திற்கு ஒரு கட்டுக்கோப்பான ஒழுக்க நெறி வலியுறுத்தப்படும்.  உலகைப் படைத்த ஒருவனை ஏற்காத பௌத்த, சமண, ஆசீவக சமயங்கள் பிறப்பறுக்கும் குறிக்கோளை அடைவதற்காகக் கண்டிப்பான நடைமுறைகளை- ஒழுக்க நெறிகளை- மக்களுக்குச் சொல்கிறது.  எனவேதான் அவர்கள் சார்பில் அறநூற்கள் குவிந்தன.  இது சமயத்தின் அறவியல் பகுதி. உலகம், உலகத்து உயிர்கள் மற்றும் உலகப் பொருட்கள் ஆகியவற்றின் பரிணாமம் (தோற்றம், ஒடுக்கம்) குறித்துப் பேசுவது தத்துவம் அத்தத் துவம் உலகப் பொருளை உண்மை எனக்காண்பது, மாயை அல்லது கருத்து எனக் காண்பது என்று இரு பிரிவுகளாகப் பிரித்து காண்பர்.  படைத்தோன் ஒருவனை

தருமராஜாவும் திரௌபதையம்மனும்

Image
நன்றி :  புதன், பிப்ரவரி 24, 2016 தருமராஜாவும் திரௌபதையம்மனும் தொகுப்பு: ஆதி மாமல்லபுரம் பஞ்ச பாண்டவ ரதம் வளாகத்தில் உள்ள தர்மராஜா ரதம். பல்லவர்களில் ஒரு பிரிவினர் பவுத்தர்கள் என்பதால், இந்தக் கோயில் பவுத்தக் கோயிலாக இருந்திருக்க வேண்டும். பண்டைக் காலத்தில் பவுத்தர்களால் மணிமேகலை, சம்பாபதி தாராதேவி முதலிய சிறு தெய்வங்கள் வணங்கப்பட்டுவந்தன. இந்தத் தெய்வங்களின் கோயில்கள் பிற்காலத்தில் இந்துக் கோயில்களாக மாறி காளி, பிடாரி, திரௌபதையம்மன் என்னும் புதுப் பெயர்களுடன் கிராமத் தேவதைகள் ஆக்கப்பட்டன என்கிறார் பவுத்த ஆராய்ச்சியாளர் மயிலை சீனி.வேங்கடசாமி. காஞ்சிபுரத்தில் வீடு பேறடைந்த காவியத் தலைவியாகிய மணிமேகலையின் ஆலயந்தான் காஞ்சி காமாட்சியம்மன் ஆலயத்தில் உள்ள அன்னபூரணி அம்மன் என்றும், காஞ்சி காமாட்சியம்மன் ஆலயம் பவுத்தரின் தாராதேவி கோயில் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். வடதமிழகத்தில் உள்ள திரௌபதையம்மன் கோயில்கள், பண்டைக் காலத்தில் தாராதேவி கோயில்களாக இருந்தன என்று கூறப்படுகிறது. தருமராஜா அதேபோல, ‘தருமராஜா கோயில்கள்' என்ற பெயரில் அமைந்த கோயில்கள், பழங்

தாராதேவி சிற்பம் குறித்த பிரபலமான பத்திரிகை எழுத்தாளரின் ஆதாரம்.

Image
குகைகளின் வழியே – 16 கட்டுரை ,  பயணம் January 21, 2013 புவனேஸ்வர் அருகே மூன்று முக்கியமான பௌத்தமையங்கள் உள்ளன. புஷ்பகிரி, ரத்னகிரி, லலிதகிரி ஆகிய மூன்று குன்றுகளும் முன்பு மூன்று மாணிக்கக் கற்கள் என்று சொல்லப்பட்டன. மூன்றையும் இணைத்து ஒடிசாவின் அரசு ஒரு பௌத்தத் தாழ்வாரம் என அறிவித்துள்ளது. மிகப்பெரும் பொருட்செலவில் சுற்றுலா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. தோஷாலி என்ற பேரில் முதல்தரமான சுற்றுலா விடுதிகள் கட்டப்படுகின்றன. அற்புதமான கட்டிடங்கள் அவை. சுற்றுலா மையங்களும் மிகச் சிறப்பாக பராமரிக்கப் படுகின்றன. நாங்கள் முதலில் சென்றது புஷ்பகிரிக்கு. புஷ்பகிரி கிமு மூன்றாம் நூற்றாண்டு முதல் கிபி பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை நீடித்த ஒரு பௌத்த கல்வி மையம். கலிங்கம் மீது படையெடுத்து வந்த அசோகர் இங்கே இருந்த பிட்சுக்களால் மன மாற்றமும், மத மாற்றமும் செய்யப் பட்டார். அவர் இந்தக் குன்றிலிருந்த தொன்மையான பௌத்த விகாரத்தை பெரும் பொருட் செலவில் புதிப்பித்துக் கொடுத்தார் என்று சொல்லப் படுகிறது. புஷ்பகிரி புவனேஸ்வரிலிருந்து 90 கிமீ தொலைவில் உள்ளது. இங்குள்ள குன்றுகளில் இதுவே பழமையானத