சமூகப் புரட்சியை சாத்தியமாக்கும் தத்துவம்
சமூகப் புரட்சியை சாத்தியமாக்கும் தத்துவம் விவரங்கள் எழுத்தாளர்: அழகிய பெரியவன் தாய்ப் பிரிவு: தலித் முரசு பிரிவு: டிசம்பர்09 வெளியிடப்பட்டது: 22 ஜனவரி 2010 “ சமூகத்தில் பல குழுக்கள் இருப்பதைக் கொண்டு அதைக் கண்டனம் செய்ய வேண்டியதில்லை. ஆனால் , அந்தக் குழுக்கள் தனிமைப்படுத்திக் கொண்டாலோ , தன் சொந்த நலன்களில் மட்டும் ஈடுபட்டிருந்தாலோ – அத்தகைய குழுக்களைக் கொண்ட சமுதாயம் கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டும். ஏனெனில் , இந்த தனிமைதான் சமூக விரோத உணர்வை உருவாக்குகிறது. கூட்டுறவை எட்ட முடியாததாக ஆக்குகிறது. '' – டாக்டர் அம்பேத்கர் அழகிய பெரியவன் IV அம்பேத்கர் மன்னர்களின் மனைவியரோடு முதலிரவை கழிக்க பார்ப்பனர்கள் உரிமை கோரியதுடன் நிறுத்தாமல் அந்த உரிமையை கீழ்த்தட்டுப் பெண்கள் வரையிலும் செயல்படுத்த முயன்றனர்.இதற்கு அம்பேத்கர் பல எடுத்துக்காட்டுகளைத் தருகிறார். “சமோரின் (சாதியைச் சேர்ந்தவர்) திருமணம் செய்யும்போது தலைமைப் புரோகிதரோ , நம்பூதிரியோ மணப் பெண்ணை அனுபவிக்கும் வரை இவனால் (மணமகனால்) அனுபவிக்க ...