Posts

Showing posts from February, 2015

இந்துக்களின் வெறுப்பு மற்றும் விரோதமே தீண்டத்தகாத மக்களை தனிமைப்படுத்துகிறது – VIII

Image
இந்துக்களின் வெறுப்பு மற்றும் விரோதமே தீண்டத்தகாத மக்களை தனிமைப்படுத்துகிறது – VIII   எழுத்தாளர்:  அம்பேத்கர் பிரிவு:  அம்பேத்கர் தனிமைப்படுத்தப்படுதல் என்பதன் சாதகமற்ற தன்மைகளையும், உறவுமுறை என்பதன் சாதகத் தன்மைகளையும் புரிந்து கொண்டுள்ள அனைவரும் இந்த முயற்சி ஒரு பொருளற்ற முயற்சி அல்ல என்பதை ஏற்றுக் கொள்வர். தனிமைப்படுத்தப்படுதலின் விளைவுகள் என்ன? தனிமைப்படுத்தப்படுதல் என்பது சமூக இன ஒதுக்கல், சமூக அவமரியாதை, சமூக பாரபட்சம் மற்றும் சமூக அநீதி என்றே பொருள்படும். தனிமைப்படுத்தப்படுதல் என்பது பாதுகாப்பு மறுப்பு, நீதி மறுப்பு, வாய்ப்பு மறுப்பு என்றே பொருள்படும். தனிமைப்படுத்தப்படுதல் என்பது அனுதாபமின்மை, நட்புறவின்மை, கவனிப்பின்மை என்றே பொருள்படும். இன்னும் சொல்லப்போனால், தனிமைப்படுத்தப்படுதல் என்பது இந்துக்களின் இயல்பான வெறுப்பு மற்றும் விரோதம் என்றே பொருள்படும். மறுபுறத்தில் இதர சமூகக் குழுவுடன் உறவு கொள்வதன் மூலம் அந்த சமூகக் குழுவிற்குள் சமூக அந்தஸ்து, சமப் பாதுகாப்பு மற்றும் சமநீதியைப் பெறமுடியும் என்பதோடு, அதனுடைய அனுதாபத்தையும், நல்லெண்ணத்தையும் ஈட்ட முடியும்.

கருத்துச் சுதந்திரம் இல்லாத இடத்தில் சமூக மாற்றம் இல்லாமல் போய்விடும்

Image
கருத்துச் சுதந்திரம் இல்லாத இடத்தில் சமூக மாற்றம் இல்லாமல் போய்விடும்   எழுத்தாளர்:  அம்பேத்கர் பிரிவு:  அம்பேத்கர்                  இந்து சமூக அமைப்பின் குணாம்சம் என்ன? அது சுதந்திரமான சமூக அமைப்பா? இக்கேள்விக்கு விடை காண்பதற்கு முன், சுதந்திர சமூக அமைப்பின் தன்மைகளைப் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகிறது. நல்வாய்ப்பாக, இக்கருத்து விவாதத்திற்குரியதன்று. பிரெஞ்சுப் புரட்சிக்குப்பின் சுதந்திர சமூக அமைப்பின் அடிப்படை இயல்புகளைப் பற்றி கருத்து மாறுபாடு எதுவுமில்லை. இந்த அடிப்படை இயல்புகள் பலவாக இருந்த போதிலும் இரு கூறுகள் அடிப்படையானவை. முதலாவதாக, தனி மனிதர் தனக்குத் தானே முடிவெல்லையாகிறார் என்பது. சமூகத்தின் குறிக்கோளும் நோக்கமும் தனிமனிதர் வளர்ச்சியும் அவர்தம் ஆளுமையின் மேம்பாடுமேயாகும். சமூகம் தனி மனிதனுக்கு மேலானதன்று. தனிமனிதர் சமூகத்தில் தன்னை உட்படுத்தினால், அது தன் மேம்பாட்டிற்காகவும், அவசியமான அளவிற்கும்தான். இரண்டாவது இன்றியமையாக் கூறு, சமூக வாழ்வில் உறுப்பினர்களிடையேயுள்ள உறவுகள் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் என்னும் கோட்பாட

தீண்டாமையைக் கடைபிடித்த முகமதியர்கள்!

Image
தீண்டாமையைக் கடைபிடித்த முகமதியர்கள்!   எழுத்தாளர்:  அம்பேத்கர் பிரிவு:  அம்பேத்கர் நான் ஒப்புக் கொண்டால் ஒரு சுற்றுலா செல்ல விரும்புவதாக, எங்கள் இயக்கத்தின் சகதோழர்கள் சிலர் 1934இல் தெரிவித்தார்கள்; நானும் ஒப்புக் கொண்டேன். வெரூலில் உள்ள புத்தமதக் குகைகளையும் நமது சுற்றுப்பயணத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. நாசிக்குச் சென்று மற்றவர்களுடன் நான் சேர்ந்து கொள்வது என்று ஏற்பாடு ஆயிற்று. வெரூல் செல்ல நாம் அவுரங்காபாத் செல்ல வேண்டும். அய்தராபாத் மேதகு நிஜாம் அவர்களின் மகமதிய சமஸ்தானத்தின் ஆளுமைக்குட்பட்ட ஒரு நகரம் அவுரங்காபாத். அவுரங்காபாத் செல்லும் முன் தவுலாபாத் என்னும் மற்றொரு நகரத்தை நாம் கடக்க வேண்டும்; இதுவும் நிஜாமின் அய்தராபாத் சமஸ்தானத்தைச் சேர்ந்தது. தவுலா பாத் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு நகரம்; புகழ் பெற்ற இராம்தியோ ராய் என்ற இந்து மன்னரின் தலைநகராக அது ஒரு காலத்தில் விளங்கியது. தவுலாபாத் கோட்டை வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நினைவுச் சின்னம் என்பதால், அப்பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதைக் காணத் தவறுவதில்லை. அதன்படி தவுலாபாத்

புத்தர், பெண்கள் அறிவு பெறும் உரிமைக்காகப் போராடியவர் – VI

Image
புத்தர், பெண்கள் அறிவு பெறும் உரிமைக்காகப் போராடியவர் – VI   எழுத்தாளர்:  அம்பேத்கர் பிரிவு:  அம்பேத்கர்        பிக்குணிகளை (பெண் துறவி) பிக்குகளின் (ஆண் துறவி) அதிகாரத்தின் கீழ் வைத்ததை – ஒரு சமூகத் தவறு என்று கருதுபவர்கள், பெண்கள் துறவறம் பூணுவதை புத்தர் அனுமதித்தது எந்தளவுக்குப் புரட்சிகரமான நடவடிக்கை என்பதை உணர்வதில்லை. பார்ப்பனியத் தத்துவத்தின் கீழ், பெண்கள் அறிவு பெறும் உரிமை ஏற்கனவே மறுக்கப்பட்டு விட்டது. துறவறம் ஏற்கும் பிரச்சினை வந்தபோது, அவர்கள் இந்தியப் பெண்களுக்கு மற்றொரு அநீதியை இழைத்தனர். வரலாற்று ரீதியாகப் பார்க்கும்போது, வேதங்களைத் தொழும் பார்ப்பனர்களுக்கு துறவறம் ஒரு லட்சியமல்ல; அவர்கள் உபநிடதங்களைப் புனித இலக்கியம் என்று அங்கீகரிப்பதற்கு நீண்ட காலமாக மறுத்து வந்தனர். துறவறம் கொள்வது உபநிடதங்களின் லட்சியமாகும். துறவறத்தின் முடிவு ஆத்ம பிரம்மம் என்ற உபநிடதத் தத்துவத்தை எய்துவதாகும். பார்ப்பனர்கள் துறவற வாழ்க்கையைக் கடுமையாக எதிர்த்தனர். இறுதியாக, அவர்கள் சில நிபந்தனைகளின் பேரில் இறங்கி வந்தனர். அந்த நிபந்தனைகளில் ஒன்று, பெண்களும் (சூத்திரர்களும்) துறவறத

பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம் என்பதை இந்து ஆன்மிகம் ஏற்க மறுக்கிறது – VI

Image
பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம் என்பதை இந்து ஆன்மிகம் ஏற்க மறுக்கிறது – VI   எழுத்தாளர்:  அம்பேத்கர் பிரிவு:  அம்பேத்கர்   "பல சாதிகளில் உயர்மணம் திருமண விதிகளில் முக்கிய திருத்தத்தை ஏற்கச் செய்கிறது. உயர் மணம் நடைமுறையில் இருப்பின், மண உறவு கொள்ளத்தக்க குழுக்கள் சமூக அந்தஸ்து முறையில் வரிசைப்படுத்தப்படுகின்றன. மேல் சாதியினர் கீழ்சாதியில் பெண் எடுப்பார்கள். ஆனால், பெண் கொடுக்க மாட்டார்கள். ராஜபுத்திரர்களிடையே இவ்விதி பெரிதும் வளர்ச்சியடைந்துள்ளது. வேறு பல சாதிகளிலும் பின்பற்றப்படுகிறது. அனைத்து இந்துக்களிடையேயும் உயர்மணம் செய்யும் போக்கு காணப்படுகிறது'' என்கிறார் பிளன்ட்.   "உயர்மூலம்' "உயர்மணம்' பற்றிய விதிமுறைகளிலிருந்து அறியப்படுவது என்ன? எல்லா சாதிகளிலும் உயர்வு, தாழ்வு உணர்வு மேலோங்கி இருப்பதே  வெளிப்படுகிறது. இவ்வுணர்வு இல்லாத சாதிகளே இல்லை. இந்து சமூக அமைப்பில் ஏணிப்படி போல ஒன்றின் மேல் மற்றொன்று என அடுக்கப்பட்ட சாதியமைப்பு உள்ளது; தமக்கு மேலே உள்ள வகுப்பினரை அவர்கள் வெறுக்கிறார்கள்; தமக்குக் கீழே இருப்பவர்களை அவர்கள் அவமத

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சவால்விடும் துணிச்சல் இந்துக்களுக்கு இல்லை – II

Image
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சவால்விடும் துணிச்சல் இந்துக்களுக்கு இல்லை – II எழுத்தாளர்:  அம்பேத்கர் பிரிவு:  அம்பேத்கர்             இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தின்படி, ஒவ்வொரு மதவழிப்பட்ட சமூகமும் தனக்கே உரிய அரசியல் பாதுகாப்புகளைப் பெற உரிமை பெற்றுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள் தற்போதுள்ள நிலையில் – முஸ்லிம்களும், கிறித்துவர்களும் அனுபவிக்கும் அரசியல் உரிமைகளுக்கு இணையாக அனுபவித்து வருகின்றனர். தங்களுடைய மத நம்பிக்கைகளை அவர்கள் மாற்றிக் கொண்டால், அந்த மாற்றமானது இதுவரை இல்லாத எந்தவொரு அரசியல் உரிமைகளையும் அவர்களுக்கு பெற்றுத்தரப் போவதில்லை. அவர்கள் மதம் மாறவில்லை என்றால், ஏற்கனவே பெற்றிருக்கும் அரசியல் உரிமைகளை அவர்கள் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடியும். ஆதலால், அரசியல் ஆதாயத்திற்கும் மதமாற்றத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இந்தக் குற்றச்சாட்டானது, உண்மையைப் புரிந்து கொள்ளாமல் வீசப்பட்ட மோசமான குற்றச்சாட்டாகும். இரண்டாவது ஆட்சேபனையானது, அனைத்து மதங்களும் ஒரே விஷயத்தையே கற்பிக்கின்றன என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்தக் கோட்பாட்டிலிருந

இந்து சமூகத்தின் வர்க்கத்தைக் குறிக்கும் வர்ணமே சமூக அமைப்பின் அடிப்படை அலகாக உள்ளது – II

Image
இந்து சமூகத்தின் வர்க்கத்தைக் குறிக்கும் வர்ணமே சமூக அமைப்பின் அடிப்படை அலகாக உள்ளது – II எழுத்தாளர்:  அம்பேத்கர் பிரிவு:  அம்பேத்கர்                 செயலுரிமை என்பது குறித்தவற்றைச் செய்வதற்குரிய பயனுள்ள அதிகாரத்தைக் குறிக்கிறது. பயன்படுத்தும் நடைமுறைகள் இல்லாத சுதந்திரம் என ஒன்று இருக்க முடியாது. சுரண்டல் ஒழிக்கப்பட்ட இடத்தில்தான்; ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை அடக்கியாள முடியாத இடத்தில்தான்; வறுமையும் வேலையின்மையும் இல்லாத இடத்தில்தான், தான் விரும்பிய செயலின் விளைவால், தன்வேலை, வீடு, உணவு ஆகியவற்றை இழந்து விடுவோமோ என்னும் அச்சம் இல்லாத இடத்தில்தான் உண்மையான செயலுரிமை இருக்க முடியும். அரசியல் சுதந்திரம் என்பது சட்டமியற்றுவதில் பங்கு கொள்வதற்கும், அரசாங்கத்தை மாற்றுவதற்கும் உருவாக்குவதற்கும் தனி மனிதருக்குள்ள சுதந்திரமாகும். வாழ்வுரிமை, சுதந்திரம், இன்பநாட்ட முயற்சி போன்ற மாற்ற முடியாத உரிமைகளைத் தனிமனிதனுக்கு அளிப்பதற்காகவே அரசாங்கம் அமைக்கப்படுகிறது. எவருடைய உரிமைகளைக் காப்பதற்காக என்று அரசு அமைக்கப்பட்டிருக்கிறதோ, அவர்களிடமிருந்துதான் அரசு அதிகாரம் பெ

ஆணுக்கு இணையாகப் பெண்ணை உயர்த்துவதுதான் புத்தரின் நோக்கம் – X

Image
ஆணுக்கு இணையாகப் பெண்ணை உயர்த்துவதுதான் புத்தரின் நோக்கம் – X   எழுத்தாளர்:  அம்பேத்கர் பிரிவு:  அம்பேத்கர்    ஆண்களுக்கு மநு வரையறுத்துக் கூறுகிற லட்சியத்தின் சாராம்சம் இதுதான் : புனிதமான மந்திர உச்சாடனத்தோடு அவளைத் திருமணம் செய்து கொண்ட கணவன் எப்போதும் – இந்த உலகிலும், மறுஉலகத்திலும் அவனுடைய மனைவிக்கு மகிழ்ச்சியின் மூலாதாரமாக இருக்கிறான். அவள் எப்போதும் மகிழ்ச்சியுடனிருக்க வேண்டும். தனது வீட்டு விவகாரங்களை நிர்வகிப்பதில் சாமர்த்தியமாக இருக்க வேண்டும். தனது பாத்திரங்களை சுத்தம் செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். செலவு செய்வதில் சிக்கனமாக இருக்க வேண்டும். இதை ஒரு பெண்ணுக்கு மிகவும் உன்னதமான லட்சியம் என்று இந்துக்கள் கருதுகின்றனர். பெண்களின் இயலாமைகள் என்ற அவருடைய நினைவுச் சின்னத்தின் மீது ஓர் அடையாளக் கல்லை வைப்பது போன்று மநு, ஒரு பெண்ணைக் கொல்வதை சாதாரண குற்றம் என்கிறார். மேலும், மது (அருந்துதல்), பெண்கள், சூத்திரர்கள், வைசியர்கள் அல்லது சத்திரியர்கள் மற்றும் கடவுள் நம்பிக்கையில்லாதவர்களைக் கொல்வது ஆகிய அனைத்தும் சிறிய குற்றங்களேயாகும். ஒரு சூத்திரன

மதத்தைப் பற்றி...

Image
மதத்தைப் பற்றி... எழுத்தாளர்:  அம்பேத்கர் பிரிவு:  அம்பேத்கர் மதத்தை அழிப்பது என்று நான் கூறுவதன் பொருள் என்ன என்பதைச் சிலர் புரிந்துகொள்ளா மலிருக்கலாம்; சிலருக்கு இந்தக் கருத்து வெறுப் பாயிருக்கலாம்; சிலருக்கு அது புரட்சிகரமாகத் தோன்றலாம். எனவே நான் என்னுடைய நிலையை விளக்கி விடுகிறேன். தத்துவங்களுக்கும் விதிகளுக்கும் இடையே நீங்கள் வேறுபாடு கருதுகிறீர்களா என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் வேறுபாடு கருதுகிறேன். இந்த வேறுபாடு உண்மையானது, மிக முக்கியமானது என்றும் நான் கூறுகிறேன். விதிகள் யதார்த்தமான நடைமுறைபற்றியவை; காரியங்களைக் குறிப்பிட்ட முறைப்படி செய்வதற்கு வழக்கமான வழிகள் அவை. ஆனால் தத்துவங்கள் அறிவு சம்பந்தப்பட்டவை. விஷயங்களை மதிப்பிட்டு நிர்ணயம் செய்வதற்கு உபயோகமான வழிகள் அவை. விதிகள், ஒரு காரியத்தை ஒருவர் செய்யும் போது என்ன வழியில் செயல்பட வேண்டும் என்று கூறுகின்றன. விதிகள், சமையல் குறிப்புகள் போல, என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்று கூறுகின்றன. தத்துவம் என்பது -உதாரணமாக நீதித் தத்துவம் - ஒருவன் தன்னுடைய ஆசைகளும் நோக்கங்களும் எப்படி அமைய