Posts

Showing posts from April, 2015

சமூகப் புரட்சியை சாத்தியமாக்கும் தத்துவம்

Image
சமூகப் புரட்சியை சாத்தியமாக்கும் தத்துவம் விவரங்கள் எழுத்தாளர்:  அழகிய பெரியவன் தாய்ப் பிரிவு:  தலித் முரசு பிரிவு:  டிசம்பர்09   வெளியிடப்பட்டது: 22 ஜனவரி 2010 “ சமூகத்தில் பல குழுக்கள் இருப்பதைக் கொண்டு அதைக் கண்டனம் செய்ய வேண்டியதில்லை. ஆனால் ,  அந்தக் குழுக்கள் தனிமைப்படுத்திக் கொண்டாலோ ,  தன் சொந்த நலன்களில் மட்டும் ஈடுபட்டிருந்தாலோ  –  அத்தகைய குழுக்களைக் கொண்ட சமுதாயம் கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டும். ஏனெனில் ,  இந்த தனிமைதான் சமூக விரோத உணர்வை உருவாக்குகிறது. கூட்டுறவை எட்ட முடியாததாக ஆக்குகிறது. '' –  டாக்டர் அம்பேத்கர் அழகிய பெரியவன் IV அம்பேத்கர் மன்னர்களின் மனைவியரோடு முதலிரவை கழிக்க பார்ப்பனர்கள் உரிமை கோரியதுடன் நிறுத்தாமல் அந்த உரிமையை கீழ்த்தட்டுப் பெண்கள் வரையிலும் செயல்படுத்த முயன்றனர்.இதற்கு அம்பேத்கர் பல எடுத்துக்காட்டுகளைத் தருகிறார். “சமோரின் (சாதியைச் சேர்ந்தவர்) திருமணம் செய்யும்போது தலைமைப் புரோகிதரோ ,  நம்பூதிரியோ மணப் பெண்ணை அனுபவிக்கும் வரை இவனால் (மணமகனால்) அனுபவிக்க முடியாது. புரோகிதன் விரும்பினால் மூன்று இரவுகளைக்கூ

கால்டுவெல் முதல் கவிதாசரண் வரை

கால்டுவெல் முதல் கவிதாசரண் வரை விவரங்கள் எழுத்தாளர்:  புதிய மாதவி தாய்ப் பிரிவு:  சமூகம் - இலக்கியம் பிரிவு:  விமர்சனங்கள்   வெளியிடப்பட்டது: 17 ஆகஸ்ட் 2009 தமிழ்ச் சமூக அரசியல் சமுதாய தளத்தில் ஊடகங்களின் சாம்ராஜ்யத்தில் ஒற்றை இதழுடன் களத்தில் நிற்பவர் கவிதாசரண். சாதியற்றவன் என்பதை ஓர் அடையாளமாகக் கொண்டு சாதியப் படிநிலை தமிழ்ச் சமூகத்தின் முகத்தை அவர் காட்டும் கண்ணாடியில் காணும்போது தலைவர்களின் சுயமும் தொண்டர்களின் கனவும் செம்மொழி பேசும் தமிழ்ச் சமூகத்தை ஆடைகளைந்து நிர்வாணமாக்கி நடுத்தெருவில் நாய்கள் விரட்ட துரத்துகிறது.. சாதியப்படிநிலையைத் தக்க வைத்துக் கொண்டதில் தன்னிகரற்று திகழும் செந்தமிழனின் 2500 ஆண்டு கால வரலாற்றில் பெருமைப்பட்டுக்கொள்ள அப்படி என்ன தான் இருக்கிறது  என்ற தந்தை பெரியாரின் கேள்வி கவிதாசரணின் ஒவ்வொரு கட்டுரையின் அடிநாதமாக இருப்பதாக தொடர்ந்து 15 ஆண்டுகாலத்திற்கும் மேலான அவர் எழுத்துகளின் வாசிப்பில் நான் உணர்ந்ததுண்டு. தமிழ்ச் சமூகமும் தலித்தியக் கருத்தாடலும் என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும் அவர் கட்டுரைகளின் தொகுப்பு கால்டுவெல் ஒப்பிலக்கணத்தை மறுபதிப
Image
பட்டியல் சாதியினரின் கொள்கைகள் உலகையே மறு சீரமைக்கக் கூடியவை   எழுத்தாளர்:  அம்பேத்கர் தாய்ப் பிரிவு:  தலித் முரசு பிரிவு:  நவம்பர்08   வெளியிடப்பட்டது: 12 மே 2010 ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடும்போது, எல்லோரும் ஒன்றிணைவார்கள். ஆனால், ஆங்கிலேயர்கள் வெளியேறி, ஒரு வெற்றிடம் ஏற்பட்டு, காங்கிரஸ் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து சமூக, பொருளாதார நிலைமைகளை மறு ஆய்வு செய்யும்போது நிலப்பிரபுக்களும், விவசாயத் தொழிலாளர்களும், முதலாளிகளும், தொழிலாளர்களும் ஒன்றிணைந்து செயல்பட முடியுமா? சுயராஜ்ஜியம் வந்த மறுகணமே காங்கிரஸ் கட்சி சிதறி விடும். ஆனால், பட்டியல் சாதியினரின் கட்சி என்றென்றும் நீடித்திருக்கும். அது ஒரு நிரந்தரக் கட்சி. அது சில அடிப்படைக் கொள்கைகளோடு இருக்கிறது. பட்டியல் சாதியினர் ரொட்டிக்காகவும், மீனுக்காகவும் போராடுகின்றனர் என்று கூறுவது கடைந்தெடுத்த முட்டாள்தனம். அவர்கள் இந்த நாடு பின்பற்ற வேண்டிய சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய உயர்ந்த கொள்கைகளுக்காகப் போராடுகின்றனர். அவர்களுடைய கொள்கைகள், பட்டியல் சாதியினரின் நலன்கள் என்ற குறுகிய வட்டத்தைக் கடந்து நிற்கின்றன. அவர

"ரவிதாஸ் ஆகிய நான், வேதங்கள் அனைத்தும் பயனற்றவை என்று பிரகடனப்படுத்துகிறேன்’’

Image
"ரவிதாஸ் ஆகிய நான், வேதங்கள் அனைத்தும் பயனற்றவை என்று பிரகடனப்படுத்துகிறேன்’’ தாய்ப் பிரிவு:  தலித் முரசு பிரிவு:  ஜனவரி10   வெளியிடப்பட்டது: 15 பிப்ரவரி 2010 " தீண்டத்தகாதோர் யார் ?'  என்ற நூலை டாக்டர் அம்பேத்கர் குரு ரவிதாசுக்கு அர்ப்பணித்துள்ளார். : “தீண்டத்தகாதவர்களிடையே பிறந்து தங்களுடைய மேன்மைமிகு நடத்தையாலும் ,  நற்பண்புகளாலும் அனைவரது நன்மதிப்பையும் பெற்ற துறவிகளான நந்தனார் ,  ரவிதாஸ் ,  சொக்கமேளா ஆகியோரின் நினைவிற்கு... '' குரு ரவிதாஸ் ,  உத்தரப் பிரதேச மாநிலம் காசியில் உள்ள சீர்கோவர்தன்பூரில்  1433  ஆம் ஆண்டு பிறந்தார். அவருடைய தந்தையின் பெயர் சன்தோக் தாஸ். தாய் கல்சாதேவி. மாதா லூனா என்ற பெண்ணை அவர் மணந்தார். மாதா லூனா ,  குரு ரவிதாசின் வாழ்நாள் முழுவதும் அவருக்கு முழு ஆதரவாக நின்ற மிக எளிமையான பெண். ரவிதாஸ் காலத்தின் சமூகத்தில் கொடுமையாகவும் கடுமையாகவும் நடைமுறைப்படுத்தப்பட்ட சாதி அமைப்பின் காரணமாகவும் ,  தீண்டாமை வழக்கங்களாலும் பெரும்பான்மை மக்கள் பெரிதும் வேதனைகளை அனுபவித்து வந்தனர். அதிலும் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தீண்டத்த