Posts
- Get link
- X
- Other Apps
சிந்தனைக் களம் » சிறப்புக் கட்டுரைகள் Published: October 16, 2016 12:31 IST Updated: October 16, 2016 12:31 IST அம்பேத்கரின் பௌத்தம் செழித்திருந்தால் இந்தியா எப்படி இருந்திருக்கும்? ராமசந்திர குஹா இந்து மதத்துடன் தனக்குள்ள எல்லாத் தொடர்புகளையும் துண்டித்துக்கொள்ள விரும்புவதை 1935 அக்டோபர் மாதத்திலேயே வெளிப்படுத்தினார் அம்பேத்கர் ஒருவேளை, அம்பேத்கர் மேலும் சில ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்திருந்திருந்தால் என்னவாகியிருக்கும்? லட்சக்கணக்கில் அல்ல, பல லட்சக்கணக்கில் மக்கள் புத்த மதத்துக்கு மாறத் தொடங்கியிருந்தால், அது இந்தியாவின் சமூக, அரசியல் வரலாற்றையே புரட்டிப் போட்டிருக்கும். நான் மிகவும் விரும்பிப் படித்த நாளிதழ் இப்போது வெளிவருவது இல்லை. ‘பம்பாய் கிரானிகில்’ என்ற அந்த நாளிதழ் இந்தியர்களால் நடத்தப்பட்டது. பிரிட்டிஷ்காரர்களுக்குச் சொந்தமான, பிரிட்டிஷ்காரர்களுக்குத் தேவைப்படும் செய்திகளைப் பிரசுரித்துவந்த ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழுக்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்டது. 20-ம் நூற்றாண்டின் முதல் பாதியில் பம்பாய் என்பது, வசிப்பதற்கும் தொ...