படைவீடு : பௌத்தம் X இந்து மதம் படை கண்ட வீடு

இந்தியாவில் புகழ் பெற்ற பௌத்த தளங்களை தேடிச் சென்று அழித்து அதன் மூலம் பௌத்த தளங்களை அடையாளம் இழக்கச் செய்வது மற்றும் வரலாற்றை இந்து மதம் சார்ந்து புனைவது என்பது இந்து மதத்தின் ஒரு மறைமுக போர் தந்திரம், இந்த மறைமுக போர்முறை கி.மு. 5 ம் நூற்றாண்டு தொடங்கி இன்றுவரை தொடருகின்றது. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கூறியது போலவே இந்தியாவின் முதல் புரட்சி சாக்கியமுனி என்றழைக்கப்பட்ட கௌதம புத்தரால் உருவாக்கப்பட்டது. அதை அவர் வாழ்ந்த காலத்தில் யாராலும் முறியடிக்க முடியவில்லை. அவரது வாழ்க்கைக்குப் பிறகு அவரால் உருவாக்கப்பட்ட சங்கத்தின் மூலமாக அவரது கோட்பாடுகள் மனப்பாடம் செய்யப்பட்டு பின்பற்றப் பட்டு வந்தது. அவரின் மறைவுக்குப் பிறகு 200 ஆண்டுகள் கழித்து மாமன்னர் அசோகர் தனது கலிங்கப் போருக்கு பின்னர் மனமாற்றம் கண்டு பௌத்த நெறிகளை பின்பற்றத் தொடங்கினார். அவரால் பௌத்தம் மீண்டும் தழைத்தோங்கியது. அசோகர் காலத்து கல்வெட்டு குறிப்புகள் மூலம் சோழர் நாட்டில் ( தற்போதைய தஞ்சாவூர், நாகபட்டினம், திருச்சி புதுகோட்டை ஆகிய மாவட்டங்கள் உள்ளடக்கிய பகுதிகள் ), பல்லவ நாட்டில் ( தற்போதைய காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்கள் உள்ளடக்கிய பகுதிகள் ) மற்றும் பாண்டிய நாட்டில் ( தற்போதைய மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் உள்ளடக்கிய பகுதிகள்) பௌத்தம் இருந்ததற்கான குறிப்புகள் இருக்கின்றன. அதே போல் யுவாங் சுவாங் ( கி.பி. 640 ஆண்டு)  நாட் குறிப்பிலும் பௌத்தம் தமிழ்நாட்டில் இருந்த்தற்கான அடையாளங்களை அவரது நாட்குறிப்பிலும் காணமுடிகிறது. சங்க கால இலக்கியங்களிலும் பௌத்தம் சிறப்பாக இருந்ததற்கான அடையாளங்கள் அதிகமாக காணப்படுகிறது. களப்பிரர்களின் ஆட்சி காலம் பௌத்தத்தின் பொற்காலமாக இருந்திருக்கிறது. அதன் பிறகு பண்டிதர் அயோத்திதாசரும் தனது ஆய்வுகளின் மூலம் இந்து சாதி வர்ணத்தை ஏற்றுக்கொள்ளாத மக்களே தீண்டத்தகாத மக்களாக மாற்றப்பட்டு ஊருக்கு வெளியே குடியமர்த்தப்பட்டனர். அதாவது பௌத்த இந்து மத போரில் தோல்வியுற்ற பௌத்தர்களே தீண்டத்தகாதவர்கள் அல்லது சாதிக் கெட்டவர்கள் ஆக்கப்பட்டனர் என்றார். எனவே தீண்டதகாதோர் என்றழைக்கப்பட்ட பிரிவினர் பௌத்தத்தில் இருந்து வெளியேறி " நாங்கள் இந்துக்கள் அல்ல பூர்வ பௌத்தர்கள் என்றழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். அது போலவே பின்னாளில் வந்த அம்பேதகர் பௌத்தத்தை முன்மொழிந்தார். பௌத்தம்  நமது பூர்வ அடையாளம் என்று சூளுரைத்தார். தானே தனித்துவமாய் பௌத்தம் தழுவி வரலாற்றை மறுக்கட்டமைத்தார். அவர் வழியில் நானும் (படத்தில் உள்ள சாக்கிய முனி புத்தர் சிலை ) பௌத்தம் பரவச் செய்ய முடிவு செய்து உருவாக்கப்பட்டதுதான் சாக்கியமுனி புத்த விஹார். 25.01.2013 அன்று மறைந்த அன்னை பார்வதி மாடசாமி அவர்களின் நினைவாக சாக்கிய முனி புத்தர் சிலை நிறுவப்பட்டது.

Comments

Popular posts from this blog

திருஞானசம்பந்தரின் படைப்புகளில் உள்ள புத்த மத வெறுப்பு பதிவுகள்

பௌத்தரும் தமிழும்

இரட்டை வாக்குரிமையும் தனித்தொகுதி முறையும் எழுத்தாளர்: அ.ஜெகநாதன்