சைவம் தழுவிய பௌத்தராகிய சாக்கிய நாயனார்


பெரியபுராணம் என வழங்கப்படும் திருத்தொண்டர் புராணத்தை அருளியவர் சேக்கிழார் ஆவார். இவர் காஞ்சி மாவட்டத்தில், ஸ்ரீ பெரும்புதூர் வட்டத்தில், குன்றத்தூர் என்னும் ஊரில் வேளாளர் குடியில் பிறந் தார்.
சேக்கிழாரின் இயற் பெயர் அருண்மொழித் தேவர். சோழமன்னர் களுக் கும், பல்லவர்களுக்கும், தலை நகராய் விளங்கியது காஞ்சி மாநகர். தொண்டை நாட் டைச் சார்ந்த காஞ்சி மா நகர், தொன்மை வரலாறு, சமயம், கலை ஆகிய சிறப்பு களைப் பெற்றது.
பௌத்த காப்பியங் களும், சைவ வைணவக் காப்பியங்களும் காஞ்சி மா நகரின் புகழைப் பறை சாற்றுகின்றன. சேக்கிழார் இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் சோழ நாட்டின் தலைமை அமைச் சராய் விளங்கியவர். சிவனடி யார்களின் அருட்செயல் களை 4286 பாக்களால், “பெரியபுராணமாக”ப் பாடினார்.
ஊர்தோறும் சென்று பரவிக் கிடந்த உண்மை களைத் திரட்டிப் பெரிய புராணத்தைப் படைத்துள் ளார் சேக்கிழார். பெரிய புராணம் பன்னிரு திருமுறை களில், பன்னிரண்டாம் திரு முறை ஆகும். பெரிய புராணத் திற்குச் சேக்கிழார் இட்ட பெயர் திருத்தொண்டர் புராணம். பன்னிரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இப்பெரியபுராணத்தில் அறுபது இடங்களில் காஞ்சி மாநகரின் வரலாற்றுச் சிறப்புகள் பாடப்பட்டிருக் கின்றன என்றாலும், பௌத்தராகிய சாக்கிய நாயனார் எவ்வாறு சைவம் ஏற்றார் என்ற சமய வரலாற்றினைச் சுட்டிக்காட்டிய சூழல் மிகவும் சிறப்புடையதாகும். இதன் மூலம், அக்காலகட்டத்தில் காஞ்சியில் பௌத்த சமயம் மிக்க எழுச்சி பெற்றுத் திகழ்ந்திருக்கிறது என்ற வரலாற்றினைத் தெளிவுபடுத்தியுள்ளார் சேக்கிழார்.
காஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது “கோனேரி குப்பம்” என்ற ஊர். “கோ” என்றால் அரசன் என்று பொருள். அரசன் குடியேறிய குப்பம் என்ற சிறப்புப் பெயருடன் இந்தக் கிராமம் திகழ்கிறது இங்கு “சாக்கிய நாயனர் திருத்தலம்” என்ற பெயரோடு “திருமிகு வீரட்டானேசுரர்” ஆலயம் ஒன்று உள்ளது. அதன் எதிரே குடியிருப்புப் பகுதி களுக்கு மத்தியில் போதி (அரச) மரம் உள்ளது.
பரமேசுவர வர்மன் காலத்தில் இக் கோயில் எழுப்பப்பட்டதாகவும், கி.பி. 1360-இல் விஜய நகர கம்மண்ணன் இக்கோயிலை மறு நிர்மாணம் செய்தார் என்ற வரலாறு உண்டு. இக்கோயில் உள்ளே “சாக்கிய நாயனார் படிமம்” உள்ளது. மற்றும் புத்தரது பாதபீடிகை உள்ளது. கோயிலிலுள்ள சிவலிங்கத்தையும், சாக்கிய நாயனாரையும், புத்தரது பாதபீடிகையையும் இங்குள்ள மக்கள் வழிபட்டு வருகிறார்கள். மேலும், கோனேரி குப்பத்தில் பகவான் புத்த விஹார் ஆலயம் ஒன்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சாக்கிய நாயனார், காஞ்சிப் பதிக்கு அருகில் சங்க மங்கை என்னும் ஊரில் பிறந்தவர். இவர் வேளாளர் மரபில் தோன்றினார். “உண் மைப் பொருளைத் தெரிந் தும் அதன் பயனை உணர்ந் தும் அன்புடையவராயும் எல்லா உயிர்களிடத்தும் அருள் உடையவராயும் ஒழுகிப் பிறந்தும் இறந்தும் வரும் நிலையின் தன்மை மேலும் நீண்டு இந்தப் பிறப் பிலேயே அதனின்றும் நீங்கு வேன்” என்ற கருத்துடனே அவ்வொழுக்கத்தில் நிற் பார் ஆனார்.
(சங்க மங்கை-காஞ்சிக்கு அருகில் உள்ள பதி. சங்கம் என்பது, புத்தம், தம்மம், சங்கம் என்னும் மும்மணிகளில் ஒன்று. பௌத்த பிக்குகளுக்குச் சங் கம் என்று பெயர். எனவே சங்கம் மங்கை என்கிற பெயர் பௌத்தச் சார்பானது, இது பௌத்தர்களது ஊர் என் பதை அறிய முடிகிறது.)
சாக்கிய நாயனார் ஒழுகி வரும் நாளில் தம் ஊரை விட்டு, காஞ்சி மாநகருக்குச் சென்று, உண்மை ஞானத் தை அடைவதற்குரிய பல வழிகளையும் ஆராய்ந்தார். அதன் விளைவாக பௌத்தர் களின் பௌத்த தர்மத்தை அறிந்து பௌத்தரானார். பௌத்தராகிய சாக்கிய நாயனார் காஞ்சி பௌத்த அறிஞர்களிடம் பெரிய அளவில் பௌத்தக்கல்வி பயின்றார். பின்னர் துற வாடை அணிந்து பௌத்த பிக்கு ஆனார்.
சில காலம் சென்ற பிறகு சைவ சமயத்தைப் பின் பற்றி சிவலிங்க வழிபாட்டை மேற் கொள்ள எண்ணினார் சாக்கிய நாயனார்.
அக்காலத்தில் காஞ்சி யில் பௌத்த சமயம் செல் வாக்குப் பெற்றுச் சிறப்புடன் இருந்தது. பௌத்தர்கள் பண்டைய காலத்தில் காஞ்சி யில் அதிகமாக வாழ்ந்தனர். கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட அசோக மன்னரால் கட்டப்பட்ட ஒரு பௌத்த ஸ்தூபி காஞ்சியில் இருந்ததாக, இங்கு வந்த சீனப் பயணி யுவான்சுவாங் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் எழுதியுள்ளார். கி.பி. இரண் டாம் நூற்றாண்டில் சோழ நாட்டை அரசாண்ட கிள்ளி வளவன் என்னும் சோழனின் தம்பி இளங்கிள்ளி என்பவன் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை அரசாண்ட காலத்தில் “பைம்பூம் போதிப்பகவற்கு, ஒரு சேதியும் அமைத் தான்” என்று மணிமேகலையால் அறிகின் றோம்.
போதிதருமர், சுமதி, ஜோதிபாலர், ஆசாரிய திக்நாதர், தருமபாலர், புத்த வர்மன், தர்மவர்மன், புத்தஞானர் போன்ற பௌத்த அறிஞர்கள் காஞ்சியில் கி.பி. 9 முதல் 11 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இருந்தார்கள். பௌத்தம் காஞ்சியில் பலமான செல்வாக்குடனும், சிறப்புடனும் இருந்தமையால் வெளிப் படையாகப் பௌத்த சமயத்தை விட்டுச் சைவ சமயத்திற்கு வர சாக்கியரால் இயலா மற் போயிற்று.
இதனால், பௌத்தத் துறவிக் கோலத் தை மாற்றாமல் ஒரு பொட்டலில் இருந்த சிவலிங்கத்தைச் சிறு கல்லால் எறிந்து அக்கல்லை மலர்போலப் பாவித்துப் பூசை செய்து வந்தார் சாக்கியர். சிவலிங்க பூசை செய்த பிறகு உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது சாக்கியரின் உறுதி ஆகும்.
இவ்வாறு நாள்தோறும், (பௌத்தர் கள் அறியாதவாறு) சிறு கல்லை, மலர் போலப் பாவித்து சிவலிங்க வழிபாடு செய்த சாக்கியரின் செயலைக்கண்ட பௌத்தர்கள் சிவலிங்கத்தைப் பௌத்தத் துறவி கல்லால் எறிகிறார் என்று எண்ணி மகிழ்ந்தனர். இந்நிகழ்வினைக் கீழ்க்காணும் பெரியபுராணப் பாடலில் காணலாம்,
“எந் நிலையில் நின்றாலும்
எக்கோலம் கொண்டாலும்
மன்னியசீர்ச் சங்கரன்தாள்
மறவாமை பொருள் என்றே
துன்னியவே டந்தன்னைத்
துறவாதே தூயசிவந்
தன்னைமிகும் அன்பினால்
மறவாமை தலை நிற்பார்....!”
பெரியபுராணம் (சாக்கிய நாயனார்) 3641.
சாக்கிய நாயனாரைப் பற்றி, சுந்தரர் பின்வருமாறு குறிப் பிடுகிறார்.
“வார் கொண்ட வனமுலையாள் ஒரு
உமைபங்கன் சூழலே
மறவாது கல்லெறிந்த
சாக்கியர்க்கும் அடியேன்.”
சுந்தரர் திருத்தொண்டத்தொகை -398
சாக்கிய நாயனார் உருவத்தில் அல்லாமல், உள்ளத்தால் சைவம் ஏற்றார். சாக்கிய வேடம் களையாதவராய்ச் சிவலிங்க வழிபாடு புரிந்தார். ‘உய்வுக்குரிய பொருள் சிவம்’ என உணர்ந்தார்.
எனவே பௌத்தராகிய சாக்கிய நாயனார் சைவம் ஏற்று, நாளும் ஒரு கல் எடுத்து எறிந்து சிவனை வழிபட்டார் என்பது காஞ்சி சமய வர லாற்றில் சிறப்பிடம் பெற்ற ஒரு நிகழ்வாகும்.
அக்காலத்தில், காஞ்சியில் பௌத்த அறிஞர்கள் வாழ்ந்தார்கள் என்பதையும், பௌத்த சமயம் செல் வாக்குப் பெற்று ஆதிக்கம் பெற்றிருந்தது என்பதையும் இந் நிகழ்வின் மூலம் காண முடிகிறது. அதன்பின்னர் பௌத்த சமயம் செல்வாக்கு இழக்க, அவ்விடத்தை சைவ, வைணவ, சமண சமயங்கள் நிரப்பி இருக்கக்கூடும் எனத் தெரியவருகிறது.

Thanks : http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=19831:2012-05-22-11-21-01&catid=1475:2012&Itemid=718

Comments

Popular posts from this blog

திருஞானசம்பந்தரின் படைப்புகளில் உள்ள புத்த மத வெறுப்பு பதிவுகள்

பௌத்தரும் தமிழும்

இரட்டை வாக்குரிமையும் தனித்தொகுதி முறையும் எழுத்தாளர்: அ.ஜெகநாதன்