இரட்டை வாக்குரிமையும் தனித்தொகுதி முறையும் எழுத்தாளர்: அ.ஜெகநாதன்
இரட்டை வாக்குரிமையும் தனித்தொகுதி முறையும் விவரங்கள் எழுத்தாளர்: அ.ஜெகநாதன் தாய்ப் பிரிவு: புதுவிசை பிரிவு: ஜனவரி06 வெளியிடப்பட்டது: 20 ஜனவரி 2006 (பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் உள்ள அம்பேத்கர் ஆய்வு மையம் 2005 ஆகஸ்ட் 5, 6 தேதிகளில் நடத்திய கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் திருத்திய வடிவம்) “எங்களுடைய எஜமானர்களாக இருப்பது உங்களுடைய நலன்களுக்கு உகந்ததாக இருக்கக் கூடும். ஆனால் உங்களுடைய அடிமைகளாக இருப்பது எங்களுக்கு எவ்வாறு ஏற்புடையதாக இருக்கும்?” -துசிடிடெஸ் ‘இரட்டை வாக்குரிமை தலித்துகளுக்கு கிடைத்த ஓர் அரசியல் ஆயுதம்’ என அம்பேத்கர் வர்ணித்தார். அரசியல் தளத்தில் இக்கோரிக்கை தற்போது மேலெழும்பி வருகிறது. தலித் தலைவர்களான தொல். திருமாவளவன், டாக்டர். கிருஷ்ணசாமி ஆகியோருக்கு இந்நேரத்தில் நன்றி கூற வேண்டும். (இவர்கள் மட்டும் தான் இக்கோரிக்கைகளை முன்னெடுத்த தலித் தலைவர்கள் என ஒற்றை வரியில் சொல்லிவிட முடியாது. அம்பேத்கர் நூற்றாண்டு தொடங்கிய காலத்தில் வெளியே தெரியாமல் இருந்த தலித் அமைப்புகள் மடை வெள்ளம் போல் இக்கோரிக்கையை முன்வைத்த...
Comments
Post a Comment