அண்ணலை அம்பேத்கர் அவர்களை படித்தவர்கள் இப்படியா அவமான படுத்துவது ?


காலம் எல்லாம் யாருடைய நலனுக்காக அண்ணல் பாடுபட்டாரோ அவர்கள் அண்ணலின் உழைப்பால் கிடைத்த பலன்களான உயரிய பதவிகளில் தற்போது அமர்ந்து அண்ணலின் இடஒதுக்கீட்டு பலன்களை அனுபவித்துக்கொண்டு, அண்ணலின் வழியான பௌத்த மதம் தழுவும் ஒரு விஷயத்தினை மட்டும் ஏனோ பின்பற்ற தவறிவிட்டனர். பிள்ளையார் சதுர்த்தி அன்று பிள்ளையார் சிலைகளை அதிகமாக தலித் மக்கள் வாழும் பகுதிகளில் மட்டும் வழிபாடு செய்யப்பட்டு பல ஆயிரம் பணமும் செலவு செய்யப்பட்டு விழா கொண்டாடப்படும் அந்த நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் தன்னெழுச்சியாக கலந்து கொள்வார்கள். இதற்கெல்லாம் காரணம் வருங்கால இளைஞர்களை சரியான பாதைக்கு வழிகாட்ட கல்வியாளர்கள் இல்லையா என்று நான் படிக்கும்போதும், சமூகப்பணியாற்றும் போது நினைத்து வேதனைப்பட்டது உண்டு அதற்கெல்லாம் இப்போதுதான் விடை கிடைத்தது. ஆம் தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு தலித் மக்களின் சங்கத்தின் ஆண்டு நாட்காட்டியினை பாருங்கள். என்னுடைய பெயரும் இருக்கும் ஆனால் தற்போது நான் முடிவு எடுக்கும் இடத்தில் இல்லை நானே காலண்டரை பார்த்து வேதனை அடைந்தேன். நீங்களும் பாருங்கள்.  நாம் அண்ணல் அம்பேதக்ரின் வழியில் செல்லுகிறோமா அல்லது நாம் எங்கே சென்றுக் கொண்டிருக்கின்றோம்.

Comments

Popular posts from this blog

சமூகப் புரட்சியை சாத்தியமாக்கும் தத்துவம்

போதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள்