புத்தர் பிறந்தநாளையொட்டி பவுர்ணமி சிறப்பு பூஜை

http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=16803

புத்தர் பிறந்தநாளையொட்டி பவுர்ணமி சிறப்பு பூஜை


     
2017-05-12@ 14:47:18

கண்ணமங்கலம்: சந்தவாசல் அருகே தம்ம மலையடிவாரத்தில் உள்ள சாக்கியமுனி புத்தர் கோயிலில் புத்தரின் 2561வது பிறந்தநாைளயொட்டி  பவுர்ணமி சிறப்பு பூஜை நேற்று முன்தினம் நடைபெற்றது.  ஆனந்த புத்த தம்ம தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். பேராசிரியர்கள் கணேசமூர்த்தி, வர்கீஸ், விஏஓ தண்டபாணி முன்னிலை வகித்தனர். பேராசிரியர் வேலுச்சாமி வரவேற்றார். உலக புத்த மத நிறுவனங்களின் கூட்டமைப்பு செயலாளர் விஜயலட்சுமி மெழுகுவர்த்தி ஏற்றி பூஜையை தொடங்கி வைத்தார். பின்னர், ஆன்மிக பணியில் சிறப்பாக பணியாற்றிவர்களுக்கு விருதுகளை வழங்கினார். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. முன்னதாக சாக்கியமுனி புத்த தம்மக்கொடி ஏற்றப்பட்டு வேலூர் திருவண்ணாமலை சாலையிலிருந்து கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.

Comments

Popular posts from this blog

திருஞானசம்பந்தரின் படைப்புகளில் உள்ள புத்த மத வெறுப்பு பதிவுகள்

பௌத்தம் ஒரு அறிமுகம்

புத்தரை முனீஸ்வரன் ஆக்கிய இந்து மதம்!