Parvathy : Mother of Sakyamuni Buddha is the Shaped Me
என்னை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்திய என் அன்னை கார்த்திகை திங்களில் பிறந்ததால் காத்தவராயன் , கார்த்திகேயன் என்ற பெயர் வைக்க விரும்பியவர் ஏனோ வேலுசாமி என்று என் பெயரை வைத்தார் . சமுக பொறுப்புகளை கையாள எனக்கு சொல்லிதந்த பேராசான் . தன் உடல் பொருள் அனைத்தும் எங்களின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்த தியாக உள்ளம் . விட்டு பாத்திரங்கள் முதல் தாலி வரை அடகு வைத்து உயர்கல்விக்கு பாலம் அமைத்திட்ட என் அன்னை . அன்பையும் ஆதரவையும் அள்ளித்தந்த ம்னித உறவின் உன்னதம் . சமுக பணி கல்வியில் நான் முனைவர் பட்ட ம் வரை சென்றதற்கு அச்சாணி . அண்ணல் அம்பேதகர் எழுதி இருக்கிறார் சாதி மறுப்பு திருமணத்தால் சாதி ஒழியுமாம் , அதனால் சாதி மறுப்பு திருமணத்தை நான் முன்மொழிந்தபோது என் முடிவு தோல்வி அடையக்கூடாது என்று என்னுடன் சேர்ந்து தான் பிறந்த்த உறவினர்களை எதிர்த்து எனது நோக்கத்தை செயல்படுத்திய என் அனனை சமுக மாற்றத்துக்கு வித்திட்ட சமூக சிந்ததனயாளர் . சாதி மறுப்பு திருமண பிரச்சினைகளை நான் எதிர் கொண்ட போது சென்னை உயர்நீதி மன்...