Parvathy : Mother of Sakyamuni Buddha is the Shaped Me



என்னை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்திய என் அன்னை
கார்த்திகை திங்களில் பிறந்ததால் காத்தவராயன், கார்த்திகேயன் என்ற பெயர் வைக்க விரும்பியவர் ஏனோ வேலுசாமி என்று என் பெயரை வைத்தார். சமுக பொறுப்புகளை கையாள எனக்கு சொல்லிதந்த பேராசான். தன் உடல் பொருள் அனைத்தும் எங்களின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்த தியாக உள்ளம். விட்டு பாத்திரங்கள் முதல் தாலி வரை அடகு வைத்து உயர்கல்விக்கு பாலம் அமைத்திட்ட என் அன்னை. அன்பையும் ஆதரவையும் அள்ளித்தந்த ம்னித உறவின் உன்னதம். சமுக பணி கல்வியில் நான் முனைவர் பட்டம் வரை சென்றதற்கு அச்சாணி. அண்ணல் அம்பேதகர் எழுதி இருக்கிறார் சாதி மறுப்பு திருமணத்தால் சாதி ஒழியுமாம், அதனால் சாதி மறுப்பு திருமணத்தை நான் முன்மொழிந்தபோது என் முடிவு தோல்வி அடையக்கூடாது என்று என்னுடன் சேர்ந்து தான் பிறந்த்த உறவினர்களை எதிர்த்து எனது நோக்கத்தை செயல்படுத்திய என் அனனை சமுக மாற்றத்துக்கு வித்திட்ட சமூக சிந்ததனயாளர். சாதி மறுப்பு திருமண பிரச்சினைகளை நான் எதிர் கொண்ட போது சென்னை உயர்நீதி மன்றம் வரை என் கரம் பிடித்தத வந்த என் தோழி என் அம்மா. என் மனதின் ஆழத்தை உணர்ந்த என் உற்ற நண்பன். கண் விழித்ததில் இருந்து கண் அயரும் வரை என்னை கருவரை தாண்டியும் சுமந்த மாண்புகள் பல தாங்கிய உயர்ந்த உறவு. கடவுள்களை நம்பாதவன் நான் என்பதனால் எனக்காக நீயும் புத்தரை வணங்கினாயே ! அவருடைய் புனிதப் பணித் தொடர உன் நிலத்தில் விஹார் அமைக்க இடம் தந்தாய் அம்மா. நீ இல்லாத உலகம் வெறுமையாய் இருந்தாலும்.. என் மகளாய் என் கரம் பிடித்து நடப்பதாய் உணர்கிறேன். ஆம் என் மகள் அடிக்கடி சொல்கிறாள் அப்பா உங்களுக்கு அது பிடிக்காதாம் ஆயா சொன்னார்கள், உங்களுக்கு என்ன என்ன பிடிக்கும் என்று தெரியுமே ஆயா சொன்னார்கள் என்று சொல்லும் போது நிங்கள் என்னுடன் வாழ்வதாகவே உணர்கிறேன்.




Comments

Popular posts from this blog

திருஞானசம்பந்தரின் படைப்புகளில் உள்ள புத்த மத வெறுப்பு பதிவுகள்

பௌத்தரும் தமிழும்

வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள்