Posts

புத்தர் சிலைகள்

Image

புத்தரை முனீஸ்வரன் ஆக்கிய இந்து மதம்!

Image
புத்தரை முனீஸ்வரன் ஆக்கிய இந்து மதம்! புத்தம் ஓர் அறிமுகம்   மயிலை சீனி.வெங்கடசாமி தாராதேவி, மங்கலாதேவி, சிந்தாதேவி முதலான பௌத்த தெய்வங்களின் கோயில்களும், பிற்காலத்தில் இந்துக்களால் பகவதி கோயில்களாகவும் கிராமதேவதை கோயில்களான அம்மன் கோயில்களாகவும் மாற்றப் பட்டனவாகத் தெரிகின்றன. சாத்தன்’, அல்லது ‘சாத்தனார்’ என்னும் பெயர் ‘சாஸ்தா’ என்னும் வடமொழிப் பெயரின் திரிபு. ‘சாஸ்தா’ என்பது புத்தருக்குரியபெயர்களுள் ஒன்று என்பது ‘அமரகோசம்’, ‘நாமலிங்கானுசாசனம்’ முதலிய வடமொழி நிகண்டுகளால் அறியப்படும். எனவே, ‘சாஸ்தா’ என்னும் சொல்லின் திரிபாகிய ‘சாத்தன்’ என்னும் பெயர் புத்தரைக் குறிக்கும் பெயராகப் பண்டைக் காலத்தில் வழங்கப்பட்டுவந்தது. இந்தப் பெயரைப் பௌத்த மதத்தினர் பெரும்பான்மையும் தத்தம் சிறுவருக்குச் சூட்டினர். பண்டைக் காலத்தில், அதாவது கடைச்சங்க காலத்தில், தமிழ் நாட்டிலிருந்த பௌத்தர்கள் ‘சாத்தன்’ என்னும் பெயரைப் பெரும்பாலும் மேற்கொண்டிருந்தனர் என்பது சங்க நூல்களினின்றும் தெரியவருகின்றது. பௌத்த நூலாகிய ‘மணிமேகலை’யை இயற்றியவர் பௌத்த மதத்தினர் என்பதும், அவரது பெயர்...

உலோகத்திலான பழங்கால 11 புத்தர் சிலைகள் கண்டுபிடிப்பு

Image
நாகை மாவட்டத்தில் உலோகத்திலான பழங்கால 11 புத்தர் சிலைகள் கண்டுபிடிப்பு - கட்டடம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டியபோது கிடைத்த புதையலால் வரலாற்று ஆர்வலர்கள் உற்சாகம் May 6 2015 10:41AM நாகை அருகே வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டியபோது, மண்ணில் புதைந்து கிடந்த 11 பழங்கால உலோக புத்தர் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. சந்தைப்பேட்டையைச் சேர்ந்த சுப்பையன், தனது வீட்டின் ஒருபகுதியில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டினார். அப்போது, சுமார் 5 அடி ஆழத்தில் உலோகத்திலான 11 பழங்கால சிலைகள் புதைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென...

புத்தர் தென்தமிழ் தெரிந்தவரே!

Image
புத்தர் தென்தமிழ் தெரிந்தவரே! இலக்குவனார் திருவள்ளுவன்      08 June 2014     கௌதமபுத்தரின் வாழ்க்கைக் குறிப்புகளைக் கதை கோப்புடன் கூறும் இலலிதாவித்தாரம் என்னும் வடமொழி வரலாற்று நூலொன்றினுள் கௌதமபுத்தர் தம் இளமையில் கற்றறிந்த மொழிகளுள் திராவிடம் அல்லது தமிழ் எனப்படும் மொழியும் ஒன்றெனக் குறிக்கப்படுகிறது. இந்நூல் சீனமொழியுள் கி.பி. முதல் நூற்றாண்டில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதென்றும் ஆசிரியர் ஐசக்தம்பையா தாம் எழுதியுள்ள சிவனடியாரின் அருட்பாக்கள் என்னும் ஆங்கில நூலில் குறிக்கின்றார். -          குறள்நெறி: ஆனி 32 , 1995   / 15.07.64 நன்றி :http://www.akaramuthala.in/

காஞ்சியில் அபூர்வ புத்தர் சிற்பம் கண்டெடுப்பு : எழுத்தாளர்: மு.நீலகண்டன்

Image
காஞ்சியில் அபூர்வ புத்தர் சிற்பம் கண்டெடுப்பு விவரங்கள் எழுத்தாளர்: மு.நீலகண்டன் தாய்ப் பிரிவு: உங்கள் நூலகம் பிரிவு: உங்கள் நூலகம் - மே 2014 வெளியிடப்பட்டது: 28 மே 2014 அசோகரின் இரண்டு கல்வெட்டுச் சாசனம் மூலமாகவும், மகாதீப வம்சம் என்ற இலங்கையின் பௌத்த நூல்கள் மற்றும் பாண்டிய நாட்டுக் குகைகளில் ஒன்று “அரிட்டாபட்டி” ஆகியவைகள் தரும் சான்றுகள் கொண்டு கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் ‘பௌத்த சமயம்’ தமிழ் நாட்டிற்கு வந்ததென்றும் இதனைக் கொண்டுவந்து புகுத்தியவர்கள் அசோக மன்னரும் அவரது உறவினரு மாகிய மகேந்திரரும், அவரைச் சார்ந்த பிக்குகளுமாவர் என்றும் மயிலை சீனி.வேங்கடசாமி கூறுகிறார். (பௌத்தமும், தமிழும், என்.சி.பி.எச். வெளியீடு ப.30) இதே காலகட்டத்தில் தான் காஞ்சியில் பௌத்தம் வளரத் தொடங்கியது என்று முனைவர் கபகவதி கூறுகிறார் (காஞ்சிபுரம், கி.பி. 6ஆம் நூற்றாண்டிற்கு முன் வெளியீடு, உலகத் தமிழா ராய்ச்சி நிறுவனம், ப.92) காஞ்சியில் காணப்பட்ட அன்றைய புத்த மதத்தின் செல்வாக்கை மணிமேகலையில் காண முடிகிறது என்றும் பௌத்த சமயத்தின் பொற் காலம் கி.பி. 460-700 ஆகும் என்றும்...

காஞ்சியில் புத்தர் தோட்டம் -- மு.நீலகண்டன்

Image
காஞ்சியில் புத்தர் தோட்டம் - மு.நீலகண்டன் சென்னை மாவட்டத்தை வடக் கிலும், விழுப்புரம் மாவட்டத்தைத் தெற்கிலும், வேலூர் மாவட்டத்தை மேற்கிலும், கிழக்கில் வங்கக்கடலையும் எல்லையாகக் கொண்டுள்ளது, இன்றைய காஞ்சிபுரம் மாவட்டம். கலைப்பணியாலும், அரசியல் தொண்டாலும் ஆன்மீகப் பயிர் வளர்த்த மேன்மையாலும் இம்மாவட் டம் தமிழக வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற மாவட்டமாகத் திகழ்ந்து வருகிறது. காஞ்சியின் பகுதிகள் சிவகாஞ்சி, விஷ்ணுகாஞ்சி, ஜைனக் காஞ்சி, பவுத்த காஞ்சி என்ற நான்கு பிரிவுகளாக இருந்தது. இன்று, சிவ காஞ்சி, பெரிய காஞ்சிபுரம் ஆகும். விஷ்ணு காஞ்சி, சின்ன காஞ்சிபுரம் ஆகும். காஞ்சி நகர் எல்லைக்கு வெளியே திருப்பருத்திக் குன்றம் என்ற சிற்றூரே சமணம் வளர்த்த ஜைன காஞ்சியாகும். இன்றைய காமாட்சியம்மன் கோயிலைச் சுற்றிய பகு தியே பவுத்த காஞ்சியாக இருந்தது. காஞ்சியில் ஆர்ப்பாக்கம் காஞ்சிபுரம் - உத்திரமேரூர் செல்லும் பாலாறு மற்றும் செய்யாறு ஆகிய ஆறுகளுக்கிடையே ஆர்ப்பாக்கம் என்ற கிராமம் உள்ளது. இங்கு பவுத்தர்களும், சமணர்களும் வாழ்ந்துள்ளார்கள். இங்கு சமணக் கோயில் ஒன்று இன்...

புத்தர் : ஒரு போராளியின் கதை - மருதன்

Image
புத்தர் : ஒரு போராளியின் கதை மருதன் புரட்சி / அத்தியாயம் 7 சுமார் 2500  ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் போதித்துக்கொண்டிருந்த சமயத்தில் இந்தியாவில் சமூகக் கட்டுமானம் இறுக்கமான வடிவத்தில் இருந்தது. இந்த வடிவத்துக்குத் தத்துவார்த்தமான பின்புலமும் வழங்கப்பட்டிருந்தது. நெருப்பு என்றால் எரியவேண்டும். பாறை என்றால் கடினமாக இருக்கவேண்டும். மாடு என்றால் பால் கொடுக்கவேண்டும். உயிரற்ற பொருள்களுக்கு மாத்திரமல்ல உயிருள்ள பொருள்களுக்கும் பொருந்தக்கூடிய உலகப் பார்வையாக இது வளர்த்தெடுக்கப்பட்டது. ஒரு மனிதன் என்ன தொழில் செய்யவேண்டும், எப்படி வாழவேண்டும், அவனது கடமைகள் என்னென்ன போன்றவை முன்கூட்டியே வரையறுக்கப்பட்டிருந்தன. இந்தப் பார்வை பிற்காலத்தில் மேலும் இறுக்கமடைந்து வர்ணங்களும் சாதிகளும் தோன்றுவதற்குத் தோதான சூழலை உருவாக்கிக்கொடுத்தது. யார் நாட்டை ஆளவேண்டும், யார் சேவகம் புரியவேண்டும், யார் போர் புரியவேண்டும், யார் எப்படி வாழவேண்டும் போன்றவை பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டன. இந்தப் பின்னணியில்தான் புத்தர் சிந்திக்கவும் செயல்படவும் தொடங்கியிருந்தார...