உலோகத்திலான பழங்கால 11 புத்தர் சிலைகள் கண்டுபிடிப்பு




நாகை மாவட்டத்தில் உலோகத்திலான பழங்கால 11 புத்தர் சிலைகள் கண்டுபிடிப்பு - கட்டடம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டியபோது கிடைத்த புதையலால் வரலாற்று ஆர்வலர்கள் உற்சாகம்

May 6 2015 10:41AM
நாகை அருகே வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டியபோது, மண்ணில் புதைந்து கிடந்த 11 பழங்கால உலோக புத்தர் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.

சந்தைப்பேட்டையைச் சேர்ந்த சுப்பையன், தனது வீட்டின் ஒருபகுதியில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டினார். அப்போது, சுமார் 5 அடி ஆழத்தில் உலோகத்திலான 11 பழங்கால சிலைகள் புதைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற நாகை வட்டாட்சியர் திரு. நாராயணசாமி, தலா ஒரு அடி உயரமுள்ள 11 சிலைகளையும் மீட்டு, வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார். அங்கு பாதுகாக்கப்பட்டு வரும் பழங்கால சிலைகள், எந்த நூற்றாண்டை சேர்ந்தது என்பது குறித்து கண்டறிய தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட 11 சிலைகளின் மொத்த மதிப்பு, பல லட்சம் ரூபாய் இருக்கும் என வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கலைநயமிக்க வடிவில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட புத்தர் சிலைகளை கண்டு வரலாற்று ஆர்வலர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 
 
நன்றி ;   http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_36370.html

Comments

Popular posts from this blog

திருஞானசம்பந்தரின் படைப்புகளில் உள்ள புத்த மத வெறுப்பு பதிவுகள்

பௌத்தரும் தமிழும்

இரட்டை வாக்குரிமையும் தனித்தொகுதி முறையும் எழுத்தாளர்: அ.ஜெகநாதன்