மாணிக்க வாசகர் பாடிய திருஞானசம்பந்தர துதியில் புத்த மத வெறுப்பு கருத்துகள்
திருஞானசம்பந்தர் துதி: பரசமய கோளரியைப் பாலறா வாயனைப்பூம் பழனம் சூழ்ந்த சிரபுரத்துத் திருஞான சம்பந்தப் பெருமானைத் தேய மெல்லாம் குரவையிடத் தமிழ்வேதம் விரித்தருளும் கவுணியர்கள் குலதீ பத்தை விரவிஎமை ஆளுடைய வென்றிமழ இளங்களிற்றை விரும்பி வாழ்வாம். உ சிவமயம் திருச்சிற்றம்பலம் சைவசமயகுரவர் திருவடி வாழ்க திருஞானசம்பந்த சுவாமிகள் தருமை ஆதீன வித்துவான், ஆதீனப் பல்கலைக்கல்லூரித் துணை முதல்வர், சித்தாந்த ரத்நாகரம், மதுரகவி, புலவர், முத்து. சு. மாணிக்கவாசக முதலியார் திருஞானசம்பந்தர் சீகாழியில் சிவபாதவிருதயர்க்கும் பகவதிக்கும் கௌணிய கோத்திர சிகாமணியாய்த் தோன்றியவர். மூன்றாவது வயதில், திருக்குளக்கரையில், திருத்தோணியப்பர் அம்மையுடன் எழுந்தருளி நல்கிய ஞானப்பால் உண்டதால் திருஞானசம்பந்தர் ஆனார். `தோடுடைய செவியன்` எனத் தொடங்கிய திருப்பதிகம் பாடிச் சுட்டுதற்கு எட்டாத கடவுளைச் சுட்டிக் காட்டினார். திருக்கோலக்காவில் பொற்றாளம் பெற்றார். பல தலங்களை அடைந்து தரிசித்துப் பாடியுள்ளார். திருநீலகண்டப் பெரும்பாணர்க்குத் தம் அருட்பாக்களை யாழில் அமைத்து இசைக்கும் வரங்கொடுத்தவர். திருநெல்வ...