Sakyamuni Buddha Vihar Fullmoon day meet at Padaiveedu Buddha Temple

சாக்யமுனி புத்த விஹார் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தின சந்திப்பு கூட்டங்களை தம்மமலை அடிவாரத்தில் உள்ள தம்மவாசல் சாக்கியமுனி புத்தர் கோவில் நடத்தி வருகின்றது. அந்த சந்திப்பு கூட்டங்களில் பௌத்த பிக்குகள், பௌத்த சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், அரசு ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றார்கள்.  அதன் தொடர்ச்சியாக  இந்த கார்த்திகை பௌர்ணமியில் படைவீட்டில் 2000 ஆண்டுகள் பழமையான இரண்டு புத்தர் சிலைகள் திரு. பழனி அவர்களின் பூர்வீக நிலத்திர்க்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டு, பிறகு அதன் ஒரிஜினல் சிலை எங்கு உள்ளது என்பது தெரியவில்லை ?  டி.வி.எஸ் அய்யங்கார் சேவை அறக்கட்டளை மூலம்  இரண்டு புதிய சிலைகள் பழைய இடங்களில் இருந்த இடத்தில்  புதிதாக நிறுவப்பட்டுள்ளது. சாக்யமுனி புத்தர் அறக்கட்டளை புத்தரின் கொள்கைகளை வருங்கால சந்ததியினருக்கு ஏற்றவகையில்  எடுத்து சொல்லும் நோக்கத்தோடும் மற்றும் புத்த மத அடையாளங்களை மீட்கும் செயல்களை செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக புத்தரின் அடையாளங்களை பாதுகாத்து வந்த திரு பழனி அவர்களையும், புத்தருக்கு கோவில் அமத்துத் தந்த  டி.வி.எஸ் அய்யங்கார் சேவை அறக்கட்டளையின் தம்ம காரியங்களை சாக்கியமுனி புத்த விஹார் மனதார பாராட்டுகிறது. மேலும் இந்த செயலை கௌரவிக்கும் வகையில் சாக்கியமுனி குடும்ப குழந்தைகளை அழைத்துக்கொண்டு  படைவீடு சென்று பௌர்னமி தின சிறப்பு வழிபாடுகளை புத்த தம்ம நெறிமுறையினை பின்பற்றிச் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட குழந்த்தைகள் கலந்துக்கொண்டனர். இந்நிகழ்வில் திரு.பழனி அவர்களுக்கு புத்தர் சிலையை பாதுகாத்து வந்ததற்க்காக சாக்கியமுனி புத்த விஹார் நிறுவனர். திருமதி. விஜயலட்சுமி, சால்வை அணிவித்து கௌரவித்தார். உடன் பேராசிரியர்.மா.வேலுசாமி, திரு. PKV.ராஜா- கல்வியாளர், திரு.பிரசன்னா- இசை அமைப்பாளர்,  புத்த தம்ம செயல்பாட்டாளர் திரு. தண்டபாணி அவர்களும், பொதுமக்களும் உடன் இருந்தனர். 









Comments

Popular posts from this blog

திருஞானசம்பந்தரின் படைப்புகளில் உள்ள புத்த மத வெறுப்பு பதிவுகள்

பௌத்தரும் தமிழும்

இரட்டை வாக்குரிமையும் தனித்தொகுதி முறையும் எழுத்தாளர்: அ.ஜெகநாதன்