போதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள்
போதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள்
போதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை 200ரூ.
உலக சரித்திரத்தில் பவுத்த நெறியை ஒளிரச் செய்த மிகப்பெரிய தமிழ்
ஞானியான போதிதர்மர் பற்றிய அற்புதமான விஷயங்களைக் கூறும் நூல். போதி
தர்மர், தென்னிந்தியாவில் தமிழ் மண்ணில் தோன்றிய ஞானப் பேரொளி, சீன தேசத்தை
ஆட்கொண்டது மட்டுமல்லாது, உலக முழுக்கத் தமது அருள் மணம் கமழச் செய்த
பெருமை இவருடையது.
ஜென் தத்துவம், தற்காப்புக்கலை, மருத்துவ அறிவியல் என இவருடைய மனித
நேயப் பணியின் எல்லை மிக விரிவானது. ஆசியாவின் அற்புத ஜோதியான புத்த
பெருமானின் மறு அவதாரமாகவே போதி தர்மம் உலக அறிஞர்களால் பேசப்படுகிறார்.
இந்த நூல் பெண் ஞானியர்கள் பற்றி மிக உயரிய கருத்தினையும், தர்மரட்சகா,
புத்தபத்திரா, குமாரஜீவா, பரமார்த்தா, ஜினகுப்தா, குணபத்ரா என ஏராளமான
இந்திய ஞானிகளைப் பற்றியும் கூறுகிறது. சூபி மார்க்கம், ஜென் தத்துவம்,
சைதன்யர்கள் மற்றும் ஹெடாய் எனும் சிரிக்கும் புத்தர் பற்றியெல்லாம்
ஏராளமான செய்திகள் கொடுத்து, இந்நூலை ஒரு தத்துவஞானச் சுரங்கமாக
ஆக்கியுள்ளார், நாவலாசிரியர் எஸ். குருபாதம்.
Comments
Post a Comment