1104 மதிப்பெண் பெற்று வேளாண் கல்லூரியில் ‘சீட்’கிடைத்தும் படிக்க வசதியற்ற மாணவி: தாயுடன் 100 நாள் திட்ட வேலைக்கு செல்லும் பரிதாபம்
தமிழகம்
திண்டுக்கல்1104 மதிப்பெண் பெற்று வேளாண் கல்லூரியில் ‘சீட்’கிடைத்தும் படிக்க வசதியற்ற மாணவி: தாயுடன் 100 நாள் திட்ட வேலைக்கு செல்லும் பரிதாபம்
1104 மதிப்பெண்களுடன் பள்ளியில் முதலிடம் பெற்று வேளாண் பட்டப்படிப்பு படிக்க இடம் கிடைத்தும் கல்விக் கட்டணம் செலுத்த வசதி இல்லாததால் படிக்க முடியாத மாணவி 100 நாள் திட்ட வேலைக்கு தாயுடன் செல்கிறார்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக் கோட்டை சமத்துவபுரத்தை சேர்ந்தவர் அய்யாகாளை. மனைவி நாகலட்சுமி. இவர் களுக்கு 5 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். அய்யாகாளை 5 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். நாகலட்சுமி தான் நூறு நாள் திட்ட கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.
மூத்த மகள் கீதாராணி சமீபத்தில் இறந்துவிட்டார். 2-வது மகள் ஷர்மிளாவை திருமணம் செய்து கொடுத்துவிட்டார். 3-வது மகள் பிரவீணா நிலக்கோட்டையில் ஒரு கடையில் பணிபுரிகிறார். 4-வது மகள் மல்லிகா பிளஸ் 2 படிக்கிறார். 5-வது மகள் தனலெட்சுமி(19) நிலக்கோட்டை மைக்கேல்பாளையம் ஆர்.சி. மேல்நிலைப் பள்ளியில் சமீபத்தில் பிளஸ் 2 படித்தார். கடைசி மகன் சுந்தரமகாலிங்கம் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர்களில் தனலெட்சுமி பிளஸ் 2-வில் 1104 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் தமிழ் 188, ஆங்கிலம் 172, கணிதம்197, இயற்பியல் 194, வேதியியல்187, உயிரியல்166.
தனலெட்சுமிக்கு சிறு வயது முதலே பிஎஸ்சி விவசாயம் படித்து அதிகாரியாக பணிபுரிய வேண்டும் என விருப்பம். ஆனால் கவுன்சலிங்கில் கட் ஆஃப் மதிப்பெண் 186 மட்டுமே கிடைத்ததால் தேனி தனியார் கல் லூரியில்தான் பிஎஸ்சி விவசாயம் படிக்க ‘சீட்’ கிடைத்தது. அந்த கல்லூரியில் சென்று விசாரித்துள் ளார். அவர்கள், கல்லூரி விடுதி கட்டணம் ரூ.50 ஆயிரம், கல்விக் கட்டணம் ரூ.20 ஆயிரம், சீருடை உள்ளிட்ட இதர கட்டணம் ரூ.16,500 கட்ட வேண்டும் எனத் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியும், அவரது தாயும் இந்த கட்டணத்தை கட்ட பணமில்லாமல் பலரின் உதவியை நாடியுள்ளனர். ஆனால், அவருக்கு உதவி செய்ய யாரும் முன்வராததால் நேற்று கல்லூரி திறந்தும் தன லெட்சுமியாமல் கல்லூரிக்குச் செல்ல முடியாமல் தாயுடன் கூலி வேலைக்கு சென்று வருகிறார்.
இதுகுறித்து மாணவி தன லெட்சுமி ‘தி இந்து’விடம் கூறிய தாவது:
எனது தாய்க்கு நூறு நாள் வேலை திட்டம் மூலம் கிடைக்கும் வருவாய் குடும்பத்தின் சாப்பாட்டு செலவுக்கே போதுமானதாக இல்லை. அதனால் அவரால் என்னை படிக்க வைக்க முடிய வில்லை. நான் நன்றாக படித்த தால் ஆசிரியர்களே செலவு செய்து என்னை பிளஸ் 2 வரை படிக்க வைத்தனர். பிளஸ் 2-வில் முதல் மதிப்பெண் எடுத்ததால் பள்ளியில் அனைவரும் என்னை பாராட்டினர். ஆனால், இப்போது ஆசைப்பட்ட பிஎஸ்சி வேளாண் படிப்பு படிக்க முடியாமல் கூலி வேலைக்கு செல்கிறேன். நேற்று கல்லூரி திறக்கப்பட்டது. கல்லூரி நிர்வாகத்தினர் கல்விக் கட்டணத்தை கட்டா மல் கல்லூரியில் சேர்க்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். வரும் புதன் கிழமைக்குள் கல்விக் கட்ட ணத்தை கட்டாவிட்டால் எனது சீட்டை மற்றவர்களுக்கு கொடுத்து விடுவதாக தெரிவித்துள்ளனர். கல்விக் கட்டணம் செலுத்த பணமில்லாததால் நான் ஆசைப் பட்ட பிஎஸ்சி வேளாண் படிப்பை படிக்க முடியவில்லை என்றார்.
இந்த மாணவிக்கு உதவ முன்வருவோர் 81249 21908 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Comments
Post a Comment