‘அம்பேத்கர் – இன்றைய உடனடித் தேவை’ எழுத்தாளர்: அருந்ததி ராய்
‘அம்பேத்கர் – இன்றைய உடனடித் தேவை’ விவரங்கள் எழுத்தாளர்: அருந்ததி ராய் தாய்ப் பிரிவு: தலித் முரசு பிரிவு: தலித் முரசு - செப்டம்பர் 2012 வெளியிடப்பட்டது: 05 ஜூன் 2014 பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் முதன்மையான, புகழ்பெற்ற நூல் "ஜாதியை அழித்தொழிக்கும் வழி' (Annihilation of Caste) ஆகும். இதன் முக்கியத்துவம் கருதியே இந்நூலை "தலித் முரசு' சிறப்பிதழாக 2007 இல் (11,000 படிகள்) வெளியிட்டது. அதற்குப் பிறகு நூல் வடிவில் இரண்டாம் பதிப்பாக 2010 இல் 3,000 படிகள் வெளியிட்டோம். தற்பொழுது 2014 இல் மீண்டும் 3,000 படிகள் வெளியிட்டுள்ளோம். ஆக, ஆறு ஆண்டுகளில் 17 ஆயிரம் படிகள் வெளியிட்டும் தமிழகத்தில் இதுவரை இந்நூல் குறித்து எவ்வித விவாதமும் – புரட்சி மற்றும் முற்போக்காளர்களின் கள்ள மவுனத்தால் – திட்டமிட்டே முன்னெடுக்கப்படவில்லை. வணிக ஏடுகளில் ஒரு பக்க அளவில் நூல் மதிப்புரைகூட வந்ததில்லை. இடதுசாரி ஏடுகளும் இதற்கு விதிவிலக்கல்ல! தற்பொழுது அம்பேத்கரின் இந்நூல் புகழ்பெற்ற எழுத்தாளர் அருந்ததிராயின் 180 பக்க முன்னுரையுடன் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது...