இந்துக்களின் வெறுப்பு மற்றும் விரோதமே தீண்டத்தகாத மக்களை தனிமைப்படுத்துகிறது – VIII
இந்துக்களின் வெறுப்பு மற்றும் விரோதமே தீண்டத்தகாத மக்களை தனிமைப்படுத்துகிறது – VIII எழுத்தாளர்: அம்பேத்கர் பிரிவு: அம்பேத்கர் தனிமைப்படுத்தப்படுதல் என்பதன் சாதகமற்ற தன்மைகளையும், உறவுமுறை என்பதன் சாதகத் தன்மைகளையும் புரிந்து கொண்டுள்ள அனைவரும் இந்த முயற்சி ஒரு பொருளற்ற முயற்சி அல்ல என்பதை ஏற்றுக் கொள்வர். தனிமைப்படுத்தப்படுதலின் விளைவுகள் என்ன? தனிமைப்படுத்தப்படுதல் என்பது சமூக இன ஒதுக்கல், சமூக அவமரியாதை, சமூக பாரபட்சம் மற்றும் சமூக அநீதி என்றே பொருள்படும். தனிமைப்படுத்தப்படுதல் என்பது பாதுகாப்பு மறுப்பு, நீதி மறுப்பு, வாய்ப்பு மறுப்பு என்றே பொருள்படும். தனிமைப்படுத்தப்படுதல் என்பது அனுதாபமின்மை, நட்புறவின்மை, கவனிப்பின்மை என்றே பொருள்படும். இன்னும் சொல்லப்போனால், தனிமைப்படுத்தப்படுதல் என்பது இந்துக்களின் இயல்பான வெறுப்பு மற்றும் விரோதம் என்றே பொருள்படும். மறுபுறத்தில் இதர சமூகக் குழுவுடன் உறவு கொள்வதன் மூலம் அந்த சமூகக் குழுவிற்குள் சமூக அந்தஸ்து, சமப் பாதுகாப்பு மற்றும் சமநீதியைப் பெறமுடியும் என்பதோடு, அதனுடைய அனுதாபத்தையும், நல்லெண்ணத்தையும் ஈட்...