தியானப்பயிற்சி

Meditation Practice
தியானப்பயிற்சி 



If you want to be around to meet the future Buddha, then just don’t practice. You’ll probably be around long enough to see him when he comes.

அடுத்த புத்தரைச் சந்திக்கும் வரை நீங்கள் இங்கு இருக்க விரும்பினால், பயிற்சி செய்வதை நிறுத்திவிடுங்கள். அவர் தோன்றும் வரை நீங்கள் இவ்வுலகில் இருக்கத்தான் போகிறீர்கள்.



I’ve heard people say, "Oh, this year was a bad year for me." "How come?" I ask them. "I was sick all year," they reply. "I couldn’t practice at all." Oh! If they don’t practice when death is near, when will they ever practice? No! They only get lost in happiness. If they’re suffering, they still don’t practice. They get lost in that, too. I don’t know when people think they’re going to practice.

"ஓ, இந்த ஆண்டு எனக்கு மிக மோசமான ஆண்டு" என்று மக்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன் . "ஏன் அப்படி?" என்று நான் அவர்களைக் கேட்பேன். "ஆண்டு முழுதும் நான் நோய்வாய்ப்பட்டிருந்ததால் என்னால் தியானம் செய்யவே முடியவில்லை"என்று அவர்கள் சொல்வார்கள். " ஓ! மரணம் நெருங்கும் போது கூட அவர்களால் தியானிக்க முடிய வில்லை யென்றால் எப்பொழுதுதான் அவர்கள் தியானம் செய்யப் போகிறார்கள்? இல்லை! அவர்கள் மகிழ்ச்சியிலேயே மூழ்கிப்போய் விட்டார்கள். துன்பம் அனுபவிக்கும் போதும் அவர்கள் தியானம் செய்வதில்லை. துன்பத்திலேயே மூழ்கி விடுகிறார்கள். மக்கள் எப்பொழுது தான் தியானம் செய்ய எண்ணுவார்கள் என்றே எனக்குப் புரியவில்லை.



I’ve already laid down the schedule and rules of the monastery. Don’t transgress the existing standards. Anyone who does is not one who has come with a real intention to practice. What can such a person ever hope to see? Even if he slept near me every day, he wouldn’t see me. Even if he slept near the Buddha, he wouldn’t see the Buddha, if he didn’t practice.

நான் ஏற்கனவே விகாரையின் நெறி முறைகளையும் சட்ட திட்டங்களையும் வரையறை செய்துள்ளேன். அந்த நியதிகளை மீறி நடக்காதீர்கள். அப்படி மீறுபவர்கள் தியானம் செய்யவேண்டுமென்ற நேர்மையான நோக்குடன் இங்கு வந்தவர்களல்ல. அப்படிப் பட்டவர் இங்கு என்ன காண்போம் என எதிர் பார்க்கிறாரோ தெரியவில்லை? என் அருகில் தினந்தோறும் படுத்திருந்தாலும் அவர் என்னைப் பார்க்கப் போவதில்லை. புத்தர் அருகில் படுத்திருந்தாலும், தியானம் செய்யாவிட்டால் அவர் புத்தரைக் காண முடியாது



Don’t think that only sitting with the eyes closed is practice. If you do think this way, then quickly change your thinking. Steady practice is keeping mindful in every posture, whether sitting, walking, standing or lying down. When coming out of sitting, don’t think that you’re coming out of meditation, but that you are only changing postures. If you reflect in this way, you will have peace. Wherever you are, you will have this attitude of practice with you constantly. You will have a steady awareness within yourself.

கண்ணை மூடிக்கொண்டு அமர்ந்திருப்பதால் மட்டும் தியானம் செய்வதாக நினைக்க வேண்டாம். அப்படி நினைத்தால் உங்கள் எண்ணங்களை உடனே மாற்றிக்கொள்ளுங்கள். சீரான தியானத்தில் ஒவ்வொரு நிலையையும் உணர்ந்து இருக்க வேண்டும். உட்காரும்போதும், நடக்கும் போதும், நிற்கும் போதும், படுத்திருக்கும் போதும் உணர்ந்து இருக்க வேண்டும். அமர்ந்து தியானம் செய்து முடித்த பிறகு தியானம் முடிந்து விட்டதாகவும் நினைக்க வேண்டாம். உடல் நிலையை மாற்றிக் கொண்டதாக மட்டுமே நினைக்க வேண்டும். இப்படி யோசித்தால் உங்களுக்கு அமைதி கிடைக்கும். எங்கு இருந்தாலும் இத்தகைய தியான வழி செய்யும் மனப்போக்கு உங்களிடம் தொடர்ந்து நீடிக்கும். நீங்கள் நிலையான ‘அறிவுடை நிலை’ உங்களுள் நிலைத்திருப்பதை உணர்வீர்கள்.



"As long as I have still not attained Supreme Enlightenment, I will not rise from this place, even if my blood dries up." Reading this in the books, you may think of trying it yourself. You’ll do it like the Buddha. But you haven’t considered that your car is only a small one. The Buddha’s car was a really big one. He could do it all at once. With only your tiny, little car, how can you possibly take it all at once? It’s a different story altogether.

"ஒப்புயர் வில்லாத ஞானம் பெறும் வரை என் இரத்தம் வறண்டாலும் இந்த இடத்திலிருந்து எழுந்திருக்க மாட்டேன்." இதைப் புத்தகங்களில் படிக்கும் போது நீங்களும் இப்படி முயற்சி செய்ய எண்ணலாம். புத்தர் செய்தது போலவே நீங்களும் செய்யலாம். ஆனால் உங்கள் வண்டி மிகச் சிறியதென்பதை நீங்கள் சிந்திப்பதில்லை. புத்தருடைய வண்டி மிகப் பெரியது. அவரால் ஒரே சமயத்தில் அனைத்தையும் செய்ய முடிந்தது. உங்களுடை சின்னஞ் சிறிய வண்டியில் எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் எப்படி ஏற்ற முடியும்? இது முற்றிலும் மாறுபட்ட கதை.



I went all over looking for places to meditate. I didn’t realize it was already there, in my heart. All the meditation is right there inside you. Birth, old age, sickness, and death are right there within you. I traveled all over until I was ready to drop dead from exhaustion. Only then, when I stopped, did I find what I was looking for … inside me.

நான் தியானம் செய்யப் பல இடங்களைத் தேடிச் சென்றேன். அந்த இடம் என் உள்ளத்திலேயே இருக்கிறதென்று நான் உணரவில்லை. எல்லாத் தியானமும் இங்கேயே உங்களுக்குள் இருக்கிறது. பிறப்பு, மூப்பு, நோய் மற்றும் மரணம் எல்லாம் உங்களுக்குள்ளேயே இருக்கிறது. நான் பல இடங்கள் பயணம் செய்து கடுஞ் சோர்வினால் சாகக்கிடந்தேன். அப்போது தான், என் பயணத்தை நிறுத்திய பின் தான், நான் தேடிக்கொண்டிருந்த இடத்தைக் கண்டுபிடித்தேன் .. எனக்குள்ளேயே.



We don’t meditate to see heaven, but to end suffering.

தியானம் செய்வது சொர்க்கத்தைக் காண அல்ல, துக்கத்தை முடிக்கத்தான்.


Don’t be attached to visions or lights in meditation, don’t rise or fall with them. What’s so great about brightness? My flashlight has it. It can’t help us rid ourselves of our suffering.

தியானத்தின் போது தோன்றும் தோற்றங்களிடமோ வெளிச்சங்களிடமோ உங்களைப் பிணைத்துக் கொள்ளாதீர்கள். அவைகளுடன் உயர்ந்தோ, தாழ்ந்தோ செல்லாதீர்கள். பிரகாசமான ஒளியில் மகத்தானது ஒன்றும் இல்லையே? என்னுடைய டார்ச் லைட்டிலும் தான் வெளிச்சம் இருக்கிறது. வெளிச்சம் துயரத்தைத் துடைக்கப் போவதில்லை.



You’re blind and deaf without meditation. Dhamma isn’t easily seen. You must meditate to see what you’ve never seen. Were you born a teacher? No. You must study first. A lemon is sour only when you have tasted it.

தியானம் செய்யாமல் இருந்தால் நீங்கள் கண் தெரியாமலும், காது கேட்காததுமாக இருப்பது போலத்தான். தருமத்தை எளிதாகக் காண முடியாது. தியானத்தின் மூலம் தான் நீங்கள் இதுவரை பார்க்காதவற்றைப் பார்க்க முடியும். நீங்கள் பிறக்கும் போதே ஆசிரியராகவா பிறந்தீர்கள்? முதலில் படிக்க வேண்டும். எழுமிச்சையின் புளிப்பை அதைச் சாப்பிட்ட பிறகு தான் தெரிந்து கொள்ள முடியும்.



When sitting in meditation, say, "That’s not my business!" with every thought that comes by.

தியானத்தில் அமர்ந்திருக்கும் போது வேறு எந்தச் சிந்தனைகள் எழுந்தாலும் இப்படி சொல்லிக்கொள்ளுங்கள் "அது என் வேலை இல்லை!" என்று.


When we are lazy we should practice and not only when we feel energetic or in the mood. This is practicing according to the Buddha’s teaching. According to our own, we practice only when we’re feeling good. How are we going to get anywhere like that? When are we going to cut the stream of defilements when we practice only according to our whims like that?

சுறுசுறுப்பாகா இருக்கும் போது மட்டுமல்லாமல் சோம்பலாக இருந்தாலும் தியானம் செய்ய வேண்டும். இதுவே புத்தர் கற்பித்த முறை. நம் போக்கில் விட்டு விட்டால் நல்ல மன உணர்ச்சிகளின் போதுதான் தியானம் செய்வோம். அப்படி இருந்தால் எப்படி முன்னேறுவது? இந்த நிலையில் தொடர்ந்து தூய்மையைக் கெடுக்கும் செயல்களை எப்படி அறுத்தெறிவது?



Whatever we do, we should see ourselves. Reading books doesn’t ever give rise to anything. The days pass by, but we don’t see ourselves. Knowing about practice is practicing in order to know.

என்ன செய்தாலும் நம்மை நாமே பார்க்க வேண்டும். புத்தகங்களைப் படிப்பதால் மட்டும் என்றும் எதுவும் உதயமாகப் போவதில்லை. நாட்கள் கடக்கின்றன, ஆனால் நம்மையே நாம் பார்ப்பதில்லை. தியானத்தைத் தெரிந்து கொள்வது தெரிந்து கொள்வதற்காகவே தியானம் செய்வதற்குச் சமம்.


Of course there are dozens of meditation techniques, but it all comes down to this - just let it all be. Step over here where it is cool, out of the battle. Why not give it a try?

தியானம் செய்யப் பல்வேறு வழிகள் உள்ளன, உண்மைதான். ஆனால் எல்லா முறைகளும் ஒன்றே ஒன்றைத்தான் சொல்கின்றன - இருப்பதை இருப்பது போல விட்டு விடுங்கள். போராட்டத்திலிருந்து அடி எடுத்து வைத்து குளிர்ந்த இந்த இடத்திற்கு வாருங்கள். ஏன் இதைச் சோதனை செய்து பார்க்கக் கூடாது?


Merely thinking about practice is like pouncing on the shadow and missing the substance.

தியானத்தைப் பற்றி யோசனை மட்டும் செய்து கொண்டிருப்பது உண்மையான பொருளை விட்டு விட்டு நிழலின்மேல் பாய்வது போலத்தான்.



When I had been practicing for only a few years, I still could not trust myself. But after I had experienced much, I learned to trust my own heart. When you have this deep understanding, whatever happens, you can let it happen, and everything will just rise and pass away. You will reach a point where the heart tells itself what to do.

சில ஆண்டுகள் மட்டுமே தியானப் பயிற்சி செய்திருந்த போது, எனக்கு என் மேல் முழு நம்பிக்கை இல்லை. ஆனால் நல்ல அனுபவம் வந்த பிறகு என் உள்ளத்தை நம்பக் கற்றுக் கொண்டேன். இப்படி ஆழ்ந்த நம்பிக்கை ஏற்பட்ட பிறகு, என்ன நடந்தாலும் அதன் போக்கில் நடக்க விடலாம். நடப்பவை யெல்லாம் அப்படியே தோன்றி மறைந்து விடும். உள்ளமே என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுமளவுக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தை நீங்கள் அடைந்துவிடுவீர்கள்.


In meditation practice, it is actually worse to be caught in calmness than to be stuck in agitation, because at least you will want to escape from agitation, whereas you are content to remain in calmness and not go any further. When blissful clear states arise from insight meditation practice, do not cling to them.

தியானத்தின் போது உண்மையில் அமைதியாக இருப்பதை விட மனக்கிளர்ச்சியாக இருப்பதே நல்லதெனலாம். ஏனென்றால் நீங்கள் மனக் கிளர்ச்சியிலிருந்தால் அதனிடமிருந்து விடுபட முயல்வீர்கள். மாறாக மனஅமைதியோடிருந்தால் அப்படியே இருக்க விரும்பி அந்த நிலையை மீறி மேலே செல்ல மாட்டீர்கள். எனவே, மகிழ்வான தெளிந்த உள்ளுணர்வு வந்தாலும் அதனுடன் பிணைத்துக் கொள்ளாதீர்கள்.


Meditation is just about the mind and the feelings. It’s not something you have to run after or to struggle for. Breathing continues while working. Nature takes care of the natural processes. All we have to do is try to be aware, going inwards to see clearly. Meditation is like this.

தியானம் மனதைப் பற்றியும் உணர்ச்சிகளைப் பற்றியும் தான். அதன் பின் ஓடவோ தடுமாறவோ தேவையில்லை. வேலை செய்யும் போதும் மூச்சு விட்டுக்கொண்டுதானே இருக்கிறோம். இயற்கை இயல்பான செயல்களைக் கவனித்துக் கொள்கிறது. நாம் என்ன செய்ய வேண்டுமென்றால் உணரும் நிலையில் இருந்து உள் நோக்கித் தெளிவாகப் பார்க்க முயல வேண்டும். இதுதான் தியானம்.


Not practicing rightly is being heedless. Being heedless is like being dead. Ask yourself if you will have time to practice when you die. Constantly ask yourself, "When will I die?" If we contemplate in this way, our mind will be alert every second, heedfulness will always be present, and mindfulness will automatically follow. Wisdom will arise, seeing all things as they really are very clearly. Mindfulness guards the mind so that it knows when sensations arise at all times, day and night. To have mindfulness is to be composed. To be composed is to be heedful. If one is heedful, then one is practicing rightly.

சரியாகத் தியானம் செய்யாமல் இருப்பது அக்கறையற்ற செயலாகும். அக்கறையற்ற தன்மை மரணத்திற்குச் சமம். "இறந்த பிறகு தியானம் செய்ய நேரம் இருக்குமா?" என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். "நான் எப்போது இறப்பேன்?" என்று அடிக்கடி கேட்டுக் கொள்ளுங்கள், இப்படிச் சிந்தனை செய்தால் நமது மனம் ஒவ்வொரு நொடியும் விழித்திருக்கும். நாம் எப்போதுமே அக்கறையோடு இருப்போம். தானாக மனமும் கவனமாக இருக்கும். நுண்ணறிவு பொங்கிப் பொருட்களின் உண்மையான நிலை தெளிவாகத் தெரியும். கவனமாக இருப்பதால் மனமும் பாதுகாக்கபடுகிறது. இதனால் இரவும் பகலும் எழும் உணர்ச்சிகளை மனம் தெரிந்து கொள்கிறது. கவனமாக இருக்கும் மனம் அமைதியாக இருக்கும். அமைதியாக இருந்தால் அக்கறையோடு இருப்போம். அக்கறையோடு இருந்தால் நாம் சரியாகத் தியானம் செய்கிறோம் எனலாம்.


The basics in our practice should be: first, to be honest and upright; second, to be wary of wrongdoing; and third, to be humble within one’s heart, to be aloof and content with little. If we are content with little in regards to speech and in all other things, we will see ourselves, we won’t be distracted. The mind will have a foundation of virtue, concentration, and wisdom.

நம் தியானப் பயிற்சியின் அடிப்படை இதுவே: முதலில், வாய்மையோடும் நேர்மையோடும் இருக்க வேண்டும். இரண்டாவதாக, தவறு செய்யாதிருக்கக் கவனம் செலுத்த வேண்டும். மூன்றாவதாக, உள்ளத்தில் அகங்காரமற்று, தனித்திருந்து கிடைத்த அளவில் திருப்தி அடைய வேண்டும். குறைவான பேச்சிலும், பிற பொருட்களிலும் நாம் நிறைவு பெற்றிருந்தால் நாம் நம்மையே காண முடியும். மனமும் குழுப்பமடையாது. சீலம், ஒருமுகப் படுத்துதல், நுண்ணறிவு ஆகிய அடித்தளத்தோடு மனம் இருக்கும்.

First you hurry to go forward, hurry to come back, and hurry to stop. You continue to practice like this until you reach the point where it seems that going forward is not it, coming back is not it, and stopping is not it either! It’s finished. There’s no stopping, no going forward and no coming back. It is finished. Right there you will find that there is really nothing at all.

தியானம் செய்யும் போது முதலில் முன்னால் போகவும், பின்னால் வரவும், நிற்கவும் அவசரப்படுவீர்கள். மேலும் தியானம் செய்யச் செய்ய முன்னால் போவதும், திரும்புவதும், நிற்பதும் நம் குறிக்கோள் இல்லையோ என்று எண்ணும் நிலைக்கு வருவீர்கள்! எல்லாம் முடிந்தது. நிற்கவும் தேவையில்லை, முன் போகவும் தேவை இல்லை, திரும்பவும் வரவேண்டியதில்லை. எல்லாம் முடிந்தது. அப்போது உங்களுக்கு உண்மையில் எதுவுமே இல்லை என்பது விளங்கும்.


Remember you don’t meditate to "get" anything, but to get "rid" of things. We do it not with desire but with letting go. If you "want" anything, you won’t find it.

நினைவில் நிறுத்துங்கள். தியானம் செய்வது எதையும் பெறுவதற்காக இல்லை. சுமைகளை விட்டுவிடுவதற்காகத்தான். ஆசையோடு நாம் தியானம் செய்வதில்லை, கைவிடும் எண்ணத்தோடு தான் தியானம் செய்கிறோம். தியானத்தினால் உங்களுக்கு எதாவது "தேவைப்" பட்டால் அதை நீங்கள் கண்டுபிடிக்க முடியாது.


The heart of the path is quite easy. There’s no need to explain anything at length. Let go of love and hate and let things be. That’s all that I do in my own practice.

பாதையின் மையம் எளிதானதே. எதையும் விரிவாக விளக்கத் தேவையில்லை. அன்பையும், வெறுப்பையும் விட்டுவிட்டு இருப்பதை நிலைக்க விடுங்கள். என்னுடைய தியானத்தில் நான் அதை மட்டுமே செய்கிறேன்.


Asking the wrong questions shows that you are still caught in doubting. Talking about practice is all right, if it helps contemplation. But it’s up to you yourself to see the Truth.

தவறான கேள்விகளைக் கேட்கும் போது நீங்கள் இன்னும் சந்தேகங்களில் சிக்கியிருபது தெரிகிறது. , சிந்தனை செய்ய உதவினால் தியானத்தைப் பற்றிப் பேசுவது சரிதான். ஆனால் உண்மையைக் காண்பது உங்களிடம் தான் இருக்கிறது.


We practice to learn how to let go, not how to increase our holding on to things. Enlightenment appears when you stop wanting anything.

எப்படிக் கைவிடுவது என்பதைக் கற்கவே நாம் தியானம் செய்கிறோம். பொருட்களின் மீதான நமது பிடிப்பை அதிகரிப்பதற்காக அல்ல. எதையும் பெறவேண்டும் என்ற ஆசை மறைந்தபின் ஞானம் தானாகத் தோன்றும்.


If you have time to be mindful, you have time to meditate.

உங்களுக்குக் கவனிக்க நேரமிருந்தால், தியானம் செய்யவும் நேரம் இருக்கும்.


Someone recently asked me, " As we meditate and various things arise in the mind, should we investigate them or just note them coming and going?" If you see someone passing by who you don’t know, you may wonder, "Who is that? Where is he going? What is he up to?" But if you know the person, it is enough just to notice him pass by.

சமீபத்தில் ஒருவர், "நாம் தியானம் செய்யும் போது, மனதில் பல சிந்தனைகள் எழுகின்றன, அவைகளை விசாரணை செய்ய வேண்டுமா அல்லது வருவதையும் போவதையும் கவனித்தால் மட்டும் போதுமா?" என்று என்னைக் கேட்டார், . உங்களுக்குத் தெரியாத யாராவது உங்களைக் கடந்து போனால், "யார் அவர்? எங்கே போகிறார்? என்ன செய்யப் போகிறார்?" என்று அவரைப் பற்றி அறிய ஆவல் கொள்வீர்கள், ஆனால் உங்களுக்குத் தெரிந்தவராக இருந்தால், அவர் உங்களைக் கடந்து போகிறார் என்பதைக் கவனித்தாலே போதும்.


Desire in practice can be a friend or an enemy. As a friend, it makes us want to practice, to understand, to end suffering. But to be always desiring something that has not yet arisen, to want things to be other than they are, just causes more suffering, and this is when desire can be a foe. In the end, we must learn to let go of all our desires, even the desire for enlightenment. Only then can we be free.

தியானத்தின் போது மனதில் எழும் ஆசை, நண்பனைப் போலவோ பகைவனைப் போலவோ இருக்கலாம். நண்பனைப் போன்ற ஆசை நம்மைப் பயிற்சி செய்ய விரும்பவும், அறிந்து கொள்ளவும், துக்கத்தைக் களையவும் உதவுகிறது. ஆனால், இல்லாத ஒன்றுக்கு எப்போதுமே ஆசைப் படுவதும், இருக்கின்ற ஒன்றை வேறு மாதிரி உருவாக்க விரும்புவதும் அதிக துக்கத்தைத் தான் உண்டாக்கும். இந்த மன நிலையில் ஆசை பகைவனாக இருக்கிறது. முடிவில் எல்லா ஆசைகளையும் கைவிடக் கற்க வேண்டும், ஞானம் பெற வேண்டும் என்ற ஆசையையும் கூட. அப்போது தான் நாம் விடுதலை பெற்றவர்களாவோம்.


Someone once asked Ajahn Chah about the way he taught meditation: "Do you use the method of daily interviewing to examine the mind-state of a person?" Ajahn Chah responded by saying, "Here I teach disciples to examine their own mind-states, to interview themselves. Maybe a monk is angry today, or maybe he has some desire in his mind. I don’t know it but he should. He doesn’t have to come and ask me about it, does he?

ஒருமுறை அஜான் சாவை ஒருவர் அவர் கற்பிக்கும் தியான முறையைப் பற்றிக் கேட்டார்: "நீங்கள் ஒருவரின் மன நிலைய அறிந்து கொள்ளத் தினந்தோறும் அவரை விசாரிக்கும் முறையைப் பயன் படுத்துவீரா?" அஜான் சாவின் பதில், "இங்கு எனது சீடர்களுக்கு அவரவர் மன நிலைகளை அவரவரே விசாரனை செய்யவும், தங்களுக்குத் தாங்களே பேட்டி காணவும் கற்றுத் தருகிறேன். யாரேனும் ஒரு துறவி இன்று கோபமான மனநிலையில் இருக்கலாம் அல்லது மனதில் ஏதாவது ஆசை உள்ளவராக இருக்கலாம். எனக்கு அது தெரியாது, அவருக்குத் தான் தெரியும். அவர் என்னிடம் வந்து அதைப் பற்றிக் கேட்க வேண்டியதில்லையல்லவா?."


Our life is an assembly of elements. We use conventions to describe things, but we get attached to the conventions and take them to be something real. For example, people and things are given names. We could go back to the beginning, before names were given, and call men "women" and women "men" - what would be the difference? But now we cling to names and concepts, so we have the war of the sexes and other wars as well. Meditation is for seeing through all of this. Only then can we reach the unconditioned and be at peace, not at war.

நமது வாழ்க்கை நிலம், நீர், தீ, வாயு ஆகியவைகளின் கூட்டமைப்பால் ஆனது. சம்பிரதாயங்களைப் பயன்படுத்திப் பொருட்களை விளக்குகிறோம். ஆனால் அந்தச் சம்பிரதாயங்களோடு ஒட்டிக் கொண்டு அவைகளை உண்மையென்று நம்புகிறோம். உதாரணமாக மக்களுக்கும் பொருட்களுக்கும் பெயர் வைக்கப் பட்டிருக்கிறது. பெயர் வைக்கப்படாத முற்காலத்திற்குப் போக முடிந்து, அப்போது ஆணுக்குப் "பெண்" என்றும் பெண்ணுக்கு "ஆண்" என்றும் பெயர் வைக்கப்பட்டிருந்தால் என்ன வேறுபட்டிருக்கும்? ஆனால் இப்போது நாம் பெயர்களோடும் கருத்துக்களோடும் ஒட்டிக் கொண்டு விட்டதால் ஆண் பெண் என்ற போராட்டமும் பிற போராட்டங்களும் நம்மிடையே தோன்றி விட்டன. தியானம் இவற்றையெல்லாம் துளைத்துப் பார்ப்பதற்குத் தான். அப்பொழுது தான் போர் இல்லாத நிபந்தனையற்ற அமைதியைக் காண முடியும்.

Some people enter the monkhood out of faith, but later walk all over what the Buddha taught. They know better, but refuse to practice rightly. Indeed, there are not many who really practice nowadays.

சிலர் நம்பிக்கையின் காரணமாகத் துறவிகளாகிறார்கள், ஆனால் புத்தர் கற்றுத் தந்ததற்கு முரண்பாடாக நடந்து கொள்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்திருந்தும் சரியாகப் பயிற்சி செய்ய மறுக்கிறார்கள். உண்மையில் இக்காலத்தில் சரியாகப் பயிற்சி செய்பவர் மிகச் சிலரே.


Theory and practice - the first knows the name of the medicinal plant, and the second goes out to find it and uses it.

சித்தாந்தமமும்பயிற்சியும் - முதலாவது நோயைக் குணப்படுத்தத் தக்க மூலிகைச் செடியின் பெயரை அறிந்திருப்பது, இரண்டாவது அந்தச் செடியைத் தேடிச் சென்று அதனைப் பயன்படுத்துவது.

Noise - you like the sound of birds but not that of cars. You’re afraid of people and noises, and you like to live alone in the forest. Let go of the noise and take care of the baby. The "baby" is your practice.

சப்தம் - உங்களுக்குப் பறவைகளின் சப்தம் பிடிக்கிறது ஆனால் வாகனங்களின் இரைச்சல் பிடிப்பதில்லை. நீங்கள் மக்களுக்கும் இரைச்சலுக்கும் பயப்படுகிறீர்கள். அதனால் காட்டில் தனியாக வாழ விரும்புகிறீர்கள். சப்தத்தைக் கைவிடுங்கள், குழந்தையைக் கவனியுங்கள். தியானம் தான் உங்கள் "குழந்தை".


A newly ordained novice asked Ajahn Chah what his advice was for those new to meditation practice. "The same as for those who’ve already been at it for a long time," he replied. And what was that? "Just keep at it," he said.

புதிதாகத் துறவு பூண்டஒருவர் அஜான் சாவிடம் தியானத்திற்குப் புதியவர்களான தங்களைப் போன்றவர்களுக்கு அவரது அறிவுரை என்ன என்று கேட்டார். அவர் பதில்: "நீண்ட நாள் தியானம் செய்பவருக்குத் தரும் அறிவுரையே தான் உங்களுக்கும்." அந்த அறிவுரை, "தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள்" என்பதுதான்.

People say that the Buddha’s teaching is right, but it is impossible to practice in society. They say things like, "I’m young, so I don’t have the opportunity to practice, but when I’m old I’ll practice." Would you say "I’m young, so I don’t have time to eat?" If I poked you with a stick that was on fire, would you say "I’m suffering, it’s true, but since I live in this society I can’t get away from it?"

புத்தரின் போதனைகள் சரியானவைகளாயிருந்தாலும் சமுதாயத்தில் அவைகளைப் பின்பற்றுவது சாத்தியமாக இல்லை என்று சிலர் சொல்கிறார்கள் . மேலும் "நான் இளையவன், தியானம் செய்யத் தகுந்த சந்தர்ப்பம் இன்னும் கிடைக்கவில்லை, எனவே வயதான பிறகு தியானம் செய்வேன்." என்றுகூடச் சொல்வார்கள். "நான் இளையவன், எனவே எனக்குச் சாப்பிட நேரம் இல்லை?" என்று நீங்கள் சொல்வீர்களா ? "நான் உங்கள் நெஞ்சை ஒரு கொள்ளிக் கட்டையால் குத்தினால், ‘ஆம் சுடுகிறது, ஆனால் நான் இந்தச் சமுதாயத்தில் வாழ்வதால் அதைத் தடுத்து விலகிச் செல்ல முடியவில்லை’ என்றா சொல்வீர்கள்?".


Virtue, concentration, and wisdom together make up the heart of Buddhist practice. Virtue keeps the body and speech intact. And the body is the residence of the mind. So practice has the way of virtue, the way of concentration, and the way of wisdom. It’s like a piece of wood cut into three sections, but it’s really only one log. If we want to throw away body and speech, we cannot. If we want to throw away mind, we cannot. We must practice with the body and the mind. So in truth, virtue, concentration, and wisdom are one harmonious union that work together.

சீலம், ஒருமுகப்படுத்துதல், நுண்ணறிவு ஆகியவையே பௌத்த வழியின் முக்கியப் பகுதியாகும். சீலம் உடலையும், பேச்சையும் முழுமையாக வைத்திருக்கிறது. உடல் தான் மனதின் இருப்பிடம். எனவே தியானம் செய்வது சீலம் , ஒருமுகப்படுத்துதல், நுண்ணறிவு ஆகியவற்றை ஒருசேர வளர்ப்பதைப் போன்றது தான். இது ஒரு மரக் கட்டையை மூன்று துண்டுகளாக வெட்டிய பின்பும் அவை ஒரே கட்டையின் கூறுகளாக இருப்பதைப் போலத்தான். நாம் உடலையும் பேச்சையும் தூக்கி வீச முயன்றாலும், அது முடியாது. மனதைத் தூர எறிய முயன்றாலும், அதுவும் முடியாது. உடலோடும் மனத்தோடும் தான் நாம் தியானம் செய்ய வேண்டும். எனவே உண்மையில் சீலம், ஒருமுகப்படுத்துதல், நுண்ணறிவு ஆகிய மூன்றும் ஒன்றாக முரண்பாடில்லாமல் வேலை செய்ய வேண்டும்.

Comments

Popular posts from this blog

திருஞானசம்பந்தரின் படைப்புகளில் உள்ள புத்த மத வெறுப்பு பதிவுகள்

பௌத்தரும் தமிழும்

வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள்